இலங்கை மின்சார சபை ஊழியர்கள் 48 மணிநேர வேலைநிறுத்தப் போராட்டம்

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் நாளை நண்பகல் 12 மணி முதல் 48 மணிநேர அடையாள வேலைநிறுத்தப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக, இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

மேலும், வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படும் குறித்த காலப்பகுதிக்குள் தீர்வு கிடைக்காவிடின், எதிர்வரும் 15ஆம் திகதி நண்பகல் 12 மணி முதல் தொடர்ச்சியான வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாகவும் இந்த சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை மின்சார சபையின் நெடுநாள் பிரச்சினையான சம்பளம் உள்ளிட்ட சில கோரிக்கைகளுக்கு மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு யோசனைகளை முன்வைத்துள்ள நிலையிலேயே குறித்த தீர்மானம் எட்டப்பட்டதாக இந்த சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கை மின்சார சபையின் வடிவமைப்பாளர்கள் சங்கம், இலங்கை மின்சார சபையின் கண்காணிப்பாளர்கள் சங்கம் ஆகியன குறித்த சேவை நிறுத்தப் போராட்டத்தில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

Allgemein