இனி இந்தியாவைத்தாக்க எந்த பீரங்கியாலும் முடியாது

உலகளவில், வளரும் நாடுகளுள் இந்தியா பிரகாசமாக தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துக்கொண்டு பிரகாசமாக ஜொலிக்கிறது.

பொருளாதாரத்தின் எல்லாத் துறைகளிலும் அதிவேகமாகச் சீர்த்திருத்தங்கள் ஏற்பட்டு வருகின்றன.

குறிப்பாக இராணுவ பலத்தில், உலகின் முன்னிலையில் இருக்கும் ஐந்து நாடுகளுள் ஒன்றாக, இந்தியா திகழ்கிறது.

நாட்டின் பாதுகாப்பை அச்சுறுத்தும் அந்நிய சக்திகள் தொடர்ந்து வளர்ந்து வரும் நிலையில், இந்தியா தனது வளர்ச்சித் திட்டங்களில் தீவிரமாக இருக்கிறது.

சீன ராணுவ ஆயுத பலத்திற்கு சமமாக இந்திய ராணுவத்திற்கு ரூ. 5 ஆயிரம் கோடிக்கு அதிநவீன 3 ஜி பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டி ஏவுகணைகள் வெளிநாடுகளில் இருந்து வாங்க திட்டமிடப்பட்டது.

ஆனால் தற்போது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு பீரங்கி தடுப்பு ஏவுகணை பரிசோதனையை இந்தியா வெற்றிகரமாக செய்துள்ளது. இது 3ம் தலைமுறை பீரங்கி தடுப்பு ஏவுகணை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆயுதங்கள் காலாட்படை மற்றும் எந்திரமயமாக்கப்பட்ட பிரிவுகளில் பயன்படுத்தப்பட உள்ளன. இந்த வகை ஆயுதங்கள் நிலப்பகுதி தாக்குதலுக்கு மிகவும் உகந்தவையாகும்.

எனவே ராணுவத்தை 3 ம் தலைமுறை பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை கொண்டு நவீனப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

Merken

Allgemein உலகச்செய்திகள்