ஜெர்மனியில் நெருக்கடி

அகதிகள் நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பது குறித்து ஐரோப்பிய உறுப்பு நாடுகளுடன் ஒற்றுமையாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென ஜெர்மனிய அதிபர் அங்கெலோ மெர்கல் தெரிவித்துள்ளார்.

ஜெர்மனியில் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் மூன்று வாரங்கள் எஞ்சியுள்ள நிலையில் அவர் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.

ஹெய்டல்பேர்க்கில் நேற்றைய தினம், நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றியபோதே, அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.

அகதிகளின் பிரச்சினைகளைக் கையாள்வது தொடர்பில் சில ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஒற்றுமையின்றிச் செயற்படுவதாக மெர்கல் தெரிவித்துள்ளார்.

குறித்த வேற்றுமையை கலைந்து, ஒற்றுமையாக இணைந்து அகதிகள் நெருக்கடிக்கு தீர்வை மேற்கொள்ளலாமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

Allgemein உலகச்செய்திகள்