சித்தபிரமைபிடித்த சம்மந்தர் எப்படி தமிழ் உரிமைக்கு பேசுவார்…?

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷ விடுதலைப்புலிகளிடமிருந்து நாட்டைக் கைப்பற்றியதாலேயே இன்று சுதந்திரமாக திருகோணமலைக்குச்சென்று வர முடிகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்குமிடையே சந்திப்பொன்று நடைபெற்றது. இதன்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழ் மக்களின் பிரச்சனைக்கு மகிந்த ராஜபக்ஷவினாலேயே தீர்வினை வழங்கமுடியும் எனவும் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளதுடன், விடுதலைப் புலிகளிடமிருந்து நாட்டைக் கைப்பற்றியதாலேயே இன்று திருகோணமலைக்கு சுதந்திரமாகச் சென்று வரமுடிவதாகவும் தெரிவித்துள்ளார்.

அதற்கு முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷவே என இரா.சம்பந்தன் மகிந்த ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தமிழ் மக்களின் பிரச்சனையை மகிந்த ராஜபக்ஷவினாலேயே தீர்த்துவைக்கமுடியும் எனவும் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, புதிய அரசியலமைப்பில் தலையிட்டு தமிழ் மக்களின் பிரச்சனைக்கு தீர்வு காண உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

Allgemein