ஜேர்மனியில் வெகு சிறப்பாக நடைபெற்ற மடு அன்னையின் திருவிழா

ஜேர்மனியில் புலம்பெயர் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து இலங்கை மருதமடு அன்னையின் திருநாளில் நாட்டின் நிரந்தர அமைதிக்காக வேண்டுதல் செய்யும் பெருவிழா இந்த ஆண்டும் சிறப்பாக நடைபெற்றது.

குறித்த பெருவிழா ஜேர்மனி கேவலார் திருப்பதியில், நேற்று நடைபெற்றதுடன், இதில் யாழ். மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் கலந்து கொண்டிருந்தார்.

இந்த திருயாத்திரையில் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் பங்கேற்று பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த பெருவிழாவில் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மன்னார், திருகோணமலை மற்றும் யாழ்ப்பாண மறை மாவட்ட ஆயர்களும் பங்கேற்று திருப்பலியை ஒப்புக்கொடுத்திருந்தனர்.

திருவிழாவிற்கான ஆயத்த வழிபாடுகள் கடந்த 11ஆம் திகதி மாலை செபமாலை பவனியோடு ஆரம்பமாகியிருந்தன.

இம்முறை செபமாலை பவனியோடு மாதாவின் திருச்சுரூபமும் கேவலார் புகையிரத நிலையத்திலிருந்து பவனியாக எடுத்துச் செல்லப்பட்டது.

செபமாலை பவனிக்கு பின்னர் அதே நாளில் நற்கருணை ஆராதனையும் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Allgemein