15 நாடுகள் பங்குபற்றிய மாபெரும் போட்டியில் சம்பியன் கோப்பையை வென்றார் ஓவியா நரேஸ்

15 நாடுகள் பங்குபற்றிய மாபெரும் போட்டியில் சம்பியன் கோப்பையை வென்றார் ஓவியா நரேஸ்
உலகத்தமிழர் பூப்பந்தாட்ட சம்மேளனம் (றுழசடன வுயஅடை டீயனஅiவெழn குநனநசயவழைn) 2017 இல் தனது 5வது போட்டியை கனடா ரொறன்ரோவில் (ஊயயெனய வுழசழவெழ) நடாத்தியது 15 நாடுகள் பங்குபற்றிய மாபெரும் போட்டியில் 13 வயதுக்குட்பட்டவருக்கான போட்டியில் கனடாவுக்காக விளையாடிய ஓவியா நரேஸ் சம்பியன் போப்பையை வென்றுள்ளார்
ஸ்காபுறோ (ளுஉயசடிழசழரபா)நகரில் இரு நாட்களாக இரண்டு வௌ;வேறு உள்ளரங்கில் இப்போட்டிகள் நடைபெற்றது. முன்னதாக நடைபெற்ற கால் இறுதிப்போட்டியில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அனைவரையும் தோல்வியடையச் செய்த ஓவிய நரேஸ் அரை இறுதிப்போட்டியில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட யேர்மன் (புநசஅயலெ) நாட்டு வீராங்கனையுடன் மோதினார் விறுவிறுவிப்பாக நடைபெற்ற இப்போட்டியில் 2-0 என்ற செற் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். டென்மார்க் (னுநnஅயசம)நாட்டு வீராங்கனையுடன் நடந்த இறுதிப் போட்டியில் முதல் சுற்றில் தோல்வி அடைந்த போதும் 2ம் 3ம் சுற்றுக்களில் வெற்றியை நிலை நாட்டி 13 வயதுக்குட்பட்டவருக்கான சம்பியன் கோப்பையை வென்று கனடாவுக்கு பெருமை சேர்த்துள்ளார் ஓவியா நரேஸ்.

Allgemein உலகச்செய்திகள்