துன்னாலை பகுதியில் விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைப்பு: வீடு வீடாக சோதனை: மக்கள் அச்சம்

வடமராட்சி, துன்னாலை பகுதியில் இன்றைய தினம் விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைப்பில் ஈடுபட்டுள்ளனர். இரு பஸ்களின் மூலம் இவ்வாறு இரவு விசேட அதிரடிப்படையினர் கொண்டு வந்து குவிக்கப்பட்டுள்ளனர். பெருமளவிலான பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் குறித்த பகுதியில் சுற்றிவளைப்பில் ஈடுபட்டுள்ளதன் காரணமாக மக்கள் அச்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்தோடு இந்த சுற்றிவளைப்பின்போது இதுவரையில்…

சர்வதேச ரீதியில் சிறப்பு விருது பெற்ற இலங்கை மாணவி !!

ஜப்பான் ஐக்கிய நாடுகள் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற பட்டமளிக்கும் விழாவில் இலங்கை மாணவிக்கு கௌரவம் கிடைத்துள்ளது. பல நாடுகளைச் சேர்ந்த மாணவர்களில் முதல் இடத்தை பிடிப்பதற்கும், மாநாட்டில் உரையாற்றுவதற்கும் இலங்கை மாணவிக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. ஹோமாகம, மீகொட பிரதேசத்தை சேர்ந்த திலினி உபெக்ஷா களுஆராச்சி என்ற மாணவிக்கே இந்த சந்தர்ப்பம்…

பொறுக்கிகளுக்கு போராளிகளின் சாயம் பூசப்படுகிறது: வாள்வெட்டு குண்டர் குழுக்களும் கதாநாயக பிம்பமும்

புருஜோத்தமன் தங்கமயில்  கடந்த ஞாயிற்றுக்கிழமை, யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில், மோட்டார் சைக்கிளில் வந்த குண்டர் குழுவொன்று, இரு பொலிஸாரை வாள்களினால் வெட்டியிருக்கின்றது. தாக்குதலுக்குள்ளான பொலிஸாரில் ஒருவரின் நிலை கவலைக்கிடமானது என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்தத் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, கடந்த திங்கட்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த பொலிஸ் மா அதிபர்…

புலிகள் அமைப்பின் தடையை நீக்கிய 8 விஷயங்கள்!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை ஐரோப்பிய யூனியன் நீதிமன்றம் நீக்கியிருப்பதற்கு தமிழின ஆர்வலர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனி ஈழம் கோரி பிரபாகரன் தலைமையில் விடுதலைப் புலிகள் அமைப்பு போராடி வந்தது. 2001-ம் ஆண்டு அமெரிக்காவில் நிகழ்ந்த இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு, ஐரோப்பிய ஒன்றியத்தினால் பயங்கரவாத…

12 வருட சிறைத்தண்டனைக்குப் பின் விடுதலைப்புலி உறுப்பினர் நிரபராதி என விடுதலை!

2006ஆம் ஆண்டு வைகாசி மாதம் விடுதலைப் புலி உறுப்பினரான வாசு கோபால் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார். 2005ஆம் ஆண்டு இலங்கை தரைப்படையை சேர்ந்த மேஜர் ஜெனரல் பாரமி குலதுங்கவையும், மேஜர் மஜீத்தையும் சதி செய்து குண்டு வைத்து கொலை செய்ய திட்டமிட்டதாக இரண்டு குற்றச்சாட்டுக்கள் இவர்…

புலிகளுக்கு தனி நாடு வழங்க போகும் மேற்குலக நாடுகள் – விமல் வீரவன்ஸ

நாட்டை இரண்டாகப் பிரித்து சமஷ்டி அடிப்படையில் விடுதலைப்புலிகளுக்குத் தனிநாட்டைக் கொடுக்கும் ஒரேயொரு நோக்கத்துக்காகத்தான் அரசமைப்பு தயாரிக்கப்படுகின்றது. மேற்கு நாடுகளின் தேவை இதுதான் என மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.   இது தொடர்பில் இன்றைய தினம் கருத்து வெளியிட்டுள்ள விமல், புதிய அரசமைப்பை உருவாக்கும்…

தமிழீழ உதைபந்தாட்ட அணி டென்மார்க்4ஆவது மிகப் பெரிய சர்வதேசப்போட்டி

தமிழீழ உதைபந்தாட்ட அணி டென்மார்க்கில் நடைபெற இருக்கும் ஐரோப்பாவின் 4ஆவது மிகப் பெரிய சர்வதேசப்போட்டியான Vildbjerg cup-ல் களமிறங்க உள்ளது ! இன்று 3.08.17 முதல் தொடங்கி 06 .08.17 வரை டென்மார்க்கில் Vildbjerg cup நடைபெற உள்ளது. இதில் பலநூற்றுக்கணக்கான ஐரோப்பாவில் உள்ள ஆண்கள், பெண்கள்அணிகள் போட்டியிடுகின்றன.…

ரஷ்யா மீது தடைவிதிக்கும் சட்டத்திற்கு டிரம்ப் ஒப்புதல்

2016ஆம் ஆண்டு அமெரிக்கா தேர்தலில் ரஷ்யா தலையிட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக ரஷ்யா மீது தடை விதிக்க இயற்றப்பட்ட மசோதாவை சட்டமாக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். வெள்ளை மாளிகையில் தனிப்பட்ட ரீதியாக கையெழுத்திடப்பட்ட அந்த மசோதாவில் இரான் மற்றும் வட கொரியா மீதும் தடை விதிக்கப்பட்டுள்ளது.…

யாழ்/குடா நாட்டையே கதிகலங்க வைக்கும் வாள்வெட்டு குழுவினர்கள் இவர்கள்தான்!! (அனைவரின் படங்களும் உள்ளே..)

யாழ்ப்பாணத்தில் அண்மைய நாட்களாக  திடீரென அதிகரித்துள்ள வன்முறைச் சம்பவங்களை உதாரணம் காட்டி கடந்த 14 நாட்களுக்குள் பெண் ஒருவர் உட்பட 27 பேர் பொலிஸார் மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ்குடாநாட்டில் மீண்டும் தீவிரமடைந்துள்ள வன்முறைச் சம்பவங்களைத் தடுக்க பொலிசாருடன் இராணுவும் உட்பட முப்படையினரை காவல் கடமைகளுக்கு…

செல்வன் மிதுசன் சக்திதாசனின் பிறந்தநாள்வாழ்த்து 04.08.2017

டென்மார்கில் வாழ்ந்துவரும்  எழுத்தாளர் சக்திதாசனின் தம்பதிகளின் செல்வப்புதல்வன்  மிதுசன் அவர்கள் இன்று தனது இல்லத்தில் அப்பா,அம்மா, சகோதரர்களுடனும் ,உற்றார், உறவினர்களுடனும், நண்பர்களுடனும்  தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார், இவர் வா‌ழ்வில் சிறந்தோங்கி கல்வியிலும், கலையிலும் சிறந்து  இனிதே பல்லாண்டு நீடூழிகாலம் வாழ்க….வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து ஈழத்தமிழன் இணையமும்வாழ்திநிற்கிறது