தாக்குதல்தாரி தப்பிக்க முயற்சி! நடுக்கடலில் மடக்கிப் பிடித்த பொலிஸார்

முல்லைத்தீவு – முகத்துவாரம், கொக்கிளாய் பகுதியில் இளைஞரொருவர் மீது கத்தி குத்துத் தாக்குதலை மேற்கொண்டதாக சொல்லப்படும் சந்தேக நபர் தப்பிச் செல்ல முற்பட்ட வேளை பொலிஸார் நடுக்கடலில் வைத்து கைது செய்துள்ளனர்.

இன்று மாலை கொக்கிளாய் பகுதியில் கடற்றொழிலில் ஈடுபடுவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் இளைஞரொருவர் மீது மற்றொரு நபர் கத்தி வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.

இந்த நிலையில் தாக்குதலை மேற்கொண்ட நபர் கடல் வழியாக தப்பிச் செல்ல முயற்சித்த வேளை பொலிஸார் மற்றுமொரு படகில் சென்று சந்தேக நபரை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

குறித்த கத்தி வெட்டுத் தாக்குதலுக்கு இலக்காகிய; 25 வயதான இளைஞர் ஒருவர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Merken

Allgemein தாயகச்செய்திகள்