அரசமைப்பை உருவாக்கும் பணியிலிருந்து நழுவுகிறது அரசு

புதிய அர­ச­மைப்பை உரு­வாக்­கும் விட­யத்­தில் அர­சுக்கு ஆர்­வம் குன்­றி­விட்­டது. அந்த முயற்­சி­க­ளி­லி­ருந்து அவர்­கள் பின்­வாங்­கப் பார்க்­கின்­றார்­கள். சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யி­னர் தமது தனிப்­பட்ட நலன்­க­ளைப் பற்றி மாத்­தி­ரமே தற்­போது சிந்­திக்­கின்­ற­னர்.

இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப் பி­னர், ஐ.நாவின் அர­சி­யல் விவ­கா­ரங்­க­ளுக்­கான உத­விச் செய­லா­ளர் நாய­கம் ஜெப்ரி பெல்ட்­ம­னி­டம் இடித்­து­ரைத்­துள்­ள­னர்.

கொழும்­பி­லுள்ள ஐ.நா. அலு­வ­ல­கத்­தில் நேற்­றுச் சுமார் ஒரு மணி நேரம் நடை­பெற்ற சந்­திப்­பி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறப்­பட்­டுள்­ளது. ஆர்­வம் குறைந்து விட்­டது.

சந்­திப்­பின் ஆரம்­பத்­தில் கருத்­துத் தெரி­வித்த இரா.சம்­பந்­தன், தமிழ் மக்­க­ளின் அன்­றா­டப் பிரச்­சினை தொடர்­பில் அர­சின் அக்­க­றை­யீ­னம், அதில் காட்­டப்­பட்டு வரும் மெத்­த­னம் தொடர்­பில் எடுத்­துக் கூறி­யுள்­ளார்.

இதன் பின்­னர் அர­ச­மைப்பு விட­யத்­தைப் பற்றி பேசி­யுள்­ளார். இதன்­போது, புதிய அர­ச­மைப்பு உரு­வாக்க முயற்­சி­கள் 2016ஆம் ஆண்டு ஆரம்­பிக்­கப்­பட்­டது. அது இன்­ன­மும் தொடர்ந்து கொண்டு செல்­கின்­றது. அர­சுக்கு இந்த விட­யத்­தில் ஆரம்­பத்­தில் இருந்த அக்­கறை – ஆர்­வம் தற்­போது குறைந்­து­விட்­டது. அவர்­கள் இந்த முயற்­சி­க­ளி­லி­ருந்து பின்­வாங்­கப் பார்­கின்­றார்­கள். ஆனால் நாம் சரி­யா­கத்­தான் செயற்­ப­டு­கின்­றோம்.

இதே­வேளை, இந்த ஆண்டு ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யில் இலங்­கைக்கு இரண்டு ஆண்டு கால நீடிப்பு வழங்­கும் பிரே­ரணை கொண்டு வரப்­பட்­டது. இந்­தச் சந்­தர்ப்­பத்­தில் எமது கட்­சிக்­குள்­ளேயே, கால நீடிப்பு வழங்­கப்­ப­டக்­கூ­டாது என்ற குரல்­கள் எழுந்­தன.

அத­னை­யும் மீறி நாங்­கள், நம்­பிக்­கை­யின் அடிப்­ப­டை­யில் கால நீடிப்­புக்கு இணங்­கி­னோம். ஐ.நா. தீர்­மா­னத்தை அரசு மந்­த­க­தி­யி­லேயே நடை­மு­றைப்­ப­டுத்­து­கின்­றது. எதிர்­பார்த்­த­ள­வுக்கு விட­யங்­கள் நடை­பெ­ற­வில்லை என்று இரா.சம்­பந்­தன் சுட்­டிக்­காட்­டி­னார்.

மக்­கள் கோப­மாக இருக்­கி­றார்­கள்

சந்­திப்­பில் கலந்­து­கொண்­டி­ருந்த நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ரன், புதிய அர­ச­மைப்பு தேவை­யில்லை. தேர்­தல் திருத்­தம் மாத்­தி­ரமே போது­மா­னது என்ற போக்­கில் அரசு செயற்­ப­டு­கின்­றது. தமிழ் மக்­கள் இதனை ஒரு­போ­தும் ஏற்­றுக் கொள்­ள­மாட்­டார்­கள். அவர்­கள் விரக்தி நிலைக்­குச் சென்­று­கொண்­டி­ருக்­கின்­றார்­கள் என்று குறிப்­பிட்­டுள்­ளார்.

மற்­றொரு நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான செல்­வம் அடைக்­க­ல­நா­தன், மக்­கள் எங்­கள் மீது கோப­மாக இருக்­கின்­றார்­கள். அரசு பல விட­யங்­க­ளைச் செய்­ய­வில்லை. மக்­க­ளின் கோபம் நியா­ய­மா­னது. நாங்­கள் உங்­களை (ஐ.நா.) நம்­பித்­தான் இருக்­கின்­றோம்.

நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் த.சித்­தார்த்­தன், இலங்கை அர­சுக்கு 2 வரு­டக் கால அவ­கா­சம் ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யில் வழங்­கப்­ப­டு­வதை எதிர்த்­த­வர்­க­ளில் நானும் ஒரு­வன்.

கால அவ­கா­சம் வழங்­கி­னால், இலங்கை இழுத்­த­டித்து ஒன்­றை­யும் செய்­யாது. காலப் போக்­கில் அர­சும் மறந்து போகும். நீங்­க­ளும் மறந்து விடு­வீர்­கள். நாங்­கள் நடுத் தெரு­வில் நிற்­க­வேண்டி ஏற்­ப­டும் என்று சுட்­டிக்­காட்­டி­யுள்­ளார்.

மீண்­டும் ஆயு­தப் போராட்­டம்

நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சிவ­சக்தி ஆனந்­தன், தமிழ் மக்­கள் இந்த அரசு மீது விரக்­தி­ய­டைந்து விட்­டார்­கள். அதி­லும் இளை­ஞர்­கள் அதி உச்ச விரக்­திக்­குச் சென்­று­விட்­டார்­கள். மீண்­டும் ஆயு­தப் போராட்­டம் வரு­வ­தற்­கான வாய்ப்­புக்­கள் அதி­க­மாக இருக்­கின்­றது என்று தெரி­வித்­துள்­ளார்.

இதே­வேளை, இந்­தச் சந்­திப்­புத் தொடர்­பில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­னால் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்ள பத்­தி­ரி­கைச் செய்­திக் குறிப்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது:

மக்­க­ளின் காணி­களை அரசு மீளக்­கொ­டுக்­கா­மல் இருப்­ப­தற்­கான எவ்­வித நியா­ய­மான கார­ணங்­க­ளும் இல்லை எனத் தெரி­வித்த தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர், காணி­கள் மக்­க­ளி­டம் மீளக்­கை­ய­ளிக்­கப்­ப­ட­வேண்­டும் என­வும் வலி­யு­றுத்­தி­னார்.

காணா­மற்­போ­னோர் தொடர்­பில் கருத்­துத் தெரி­வித்த இரா.சம்­பந்­தன் பல்­வேறு ஆணைக்­கு­ழுக்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்ள சமர்ப்­ப­ணங்­க­ளின் அடைப்­ப­டை­யில் 20 ஆயி­ரத்­துக்­கும் அதி­க­மா­னோர் காணா­மற்­போ­யுள்­ள­தா­கத் தெரி­வித்த அதே­வேளை, இவர்­க­ளில் அநே­க­மா­னோர் ஆயு­தக் குழுக்­க­ளு­டன் தொடர்­பு­டை­ய­வர்­கள் அல்­லர் என்­ப­த­னை­யும் தெளி­வு­ப­டுத்­தி­னார்.

அன்­பிற்­கு­ரி­ய­வர்­க­ளுக்கு என்ன நடந்­த­தென்­பதை அறி­யாத நிலை­யில் மக்­கள் பெரிய மன­அ­ழுத்­தத்­தில் காணப்­ப­டு­கின்­ற­மை­யை­யும், இந்­த­நி­லைமை தொட­ர­மு­டி­யாது என்­ப­த­னை­யும் வலி­யு­றுத்­தி­னார்.

தளம்­பும் வாக்­கு­றுதி

பயங்­க­ர­வா­தத் தடைச்­சட்­டம் தொடர்­பில் கருத்து தெரி­வித்த கூட்­ட­மைப்­பின் தலை­வர், இந்­தச் சட்­டம் நீக்­கப்­ப­டும் என்ற உத்­த­ர­வா­தத்­தைப் பன்­னாட்­டுச் சமூ­கத்­திற்கு இலங்கை அரசு வழங்­கி­யி­ருந்­தது. இதனை நீக்­கு­வது தொடர்­பில் மிகச் சிறி­ய­ளவு முன்­னேற்­றமே காணப்­பட்­டுள்­ள­தா­க­வும் தெரி­வித்­தார்.

இது தொடர்­பில் கருத்­துத் தெரி­வித்த கூட்­ட­மைப்­பின் பேச்­சா­ளர் சுமந்­தி­ரன், இலங்கை அர­சா­னது இந்த விட­யம் தொடர்­பில் மிகத்­தெ­ளி­வான உத்­த­ர­வா­தத்தை ஐ.நா.வுக்கு வழங்­கி­யி­ருந்­த­மை­யைச் சுட்­டிக்­காட்­டிய அதே­வேளை, அர­சின் அமைச்­சர்­கள் அந்த உத்­த­ர­வா­தத்­திற்கு எதி­ரான கருத்­துக்­க­ளைத் தற்­போது முன்­வைப்­ப­த­னை­யும் எடுத்­துக்­காட்­டி­னார்.

அர­ச­மைப்பு

கடந்த 30 வரு­டங்­க­ளுக்­கும் மேலாக அர­ச­மைப்­புத் தொடர்­பில் அநேக விட­யங்­கள் செய்­யப்­பட்­டுள்­ள­தா­க­வும், முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்­ச­வின் அரசு உட்­பட அனைத்து அர­சு­க­ளும் நடை­மு­றை­யி­லுள்ள அர­ச­மைப்­பினை மாற்­ற­வேண்­டும் என்­ப­தில் உறு­தி­யாய் இருந்­த­னர் என­வும் தெரி­வித்­தார். தற்­போது புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கத்­தில் தடு­மாற்­றம் ஏற்­பட்­டுள்­ளது.

கால­வ­ரை­ய­றை­யின்றி இந்த விட­யங்­க­ளில் நாம் காத்­தி­ருக்க முடி­யாது என­வும், தாம் அர்ப்­ப­ணிப்­பு­டன் இந்த விட­யத்­தில் செய­லாற்­று­வ­தா­க­வும் இரா.சம்­பந்­தன் தெரி­வித்­தார். தமிழ்த்­தே­சி­யக் கூட்­ட­மைப்பு நாட்­டி­னைப் பிள­வு­ப­டுத்­தும் தீர்­வி­னைக் கோர­வில்லை.

மாறாக அனைத்து அர­சி­யல் கட்­சி­க­ளி­ன­தும் மக்­க­ளி­ன­தும் ஒத்­து­ழைப்­போ­டும் ஒப்­பு­த­லோ­டு­மான ஒரு தீர்­வி­னையே வலி­யு­றுத்­து­வ­தா­க­வும் தெரி­வித்­தார். மேலும் சில்­ல­றைத்­த­ன­மான அர­சி­யல் விளை­யாட்­டுக்­க­ளைச் செய்து எமது மக்­களை மீண்­டும் பாதிக்­கப்­பட்ட சமூ­க­மாக மாற்­று­வ­தற்கு இவர்­க­ளுக்கு இட­ம­ளிக்­க­மு­டி­யாது என­வும் அவர் தெரி­வித்­தார்.

ஐ.நா. தீர்­மா­னம்

ஐ.நா. தீர்­மா­னத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தில் காணப்­பட்ட நட­வ­டிக்­கை­கள் தொடர்­பில் திருப்தி அடைய முடி­யாது என­வும் இத­னைத் துரி­த­மாக நடை­மு­றைப்­ப­டுத்த அரசு நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ள­வேண்­டும் என­வும் தெரி­வித்­தார்.

கொடுக்­கப்­பட்ட கால அவ­கா­சத்­தி­னைச் சரி­யா­கப் பயன்­ப­டுத்­திப் பிரே­ர­ணையை உச்­ச­பட்­சத்­தில் நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தில் தேவை­யான படி­மு­றை­களை அரசு மேற்­கொள்­ளும் என்ற எதிர்­பார்ப்பு எம்­மி­டம் இருந்­த­மை­யி­னால் அரசு கால­அ­வ­கா­சத்­தி­னைக்­கோ­ரிய போது நாம் அதனை எதிர்க்­க­வில்லை.

ஆனால், கடந்த சில மாதங்­க­ளில் இடம்­பெற்­றுள்ள முன்­னேற்­றம் தொடர்­பில் ஆய்வு செய்­கின்­ற­போது தமிழ் மக்­கள் நிச்­ச­ய­மா­கத் திருப்தி அடை­ய­வில்லை – என்­றார்.

Allgemein