பிறந்தநாள் வாழ்த்து செல்வி சாருகா சந்திரகுமார் (31.07.2017)

சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் , நோர்வேயை வசிப்பிடமாகவும் கொண்டிருக்கும் சந்திரன், நளாயினி, தம்பதிகளின் செல்வப்புதல்வி சாருகா அவர்கள் (31.07.2017) இன்று தனது நான்காவது பிறந்தநாளை இல்லத்தில் கொண்டாடுகிறார். சாருகாவை அப்பா,(சந்திரன்) அம்மா (நளாயினி) மற்றும் ,உற்றார், உறவினர்கள். நண்பர்கள், பல்லாண்டுகாலம் சீரும் சிறப்புடன் நீடூழி வாழ்கவென வாழ்த்துகின்றனர். சின்னஞ்…

யாழ்ப்பாணத்தில் கோயிலுக்குள் சிக்கிய ஆயுதங்கள்

யாழ்ப்பாணம், காரைநகர், ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு அருகிலிருந்து வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. பாழடைந்த கிணற்றில் இருந்து வெடி பொருட்கள் மற்றும் இராணுவ உபகரணங்கள் நேற்று கண்டுபிடிக்கப்பட்டதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த கிணற்றை சுத்தப்படுத்தி கொண்டிருந்த பிரதேச மக்கள் முதலில் இராணுவ உபகரணங்களை அவதானித்தவுடன், கடற்படையினரிடம் தகவல் வழங்கியுள்ளனர்.…

யாழில் தீவிர பாதுகாப்பு!

யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன், விசேட அதிரடி படையினர் பல்வேறு பகுதிகளில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். கோப்பாய் பிரதேசத்தில் பொலிஸ் அதிகாரிகள் இருவர் மீது மர்மநபர்கள் வாள்வெட்டு தாக்குதல் நடத்தினர். மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத குழுக்கள் தாக்குதல் மேற்கொண்டதன் காரணமாக பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் ஆவா குழுவின்…

பிரித்தானியாவில் 150 பேரின் குடியுரிமை பறிபோகின்றது..!!

பிரித்தானியாவில் கடந்த சில மாதங்களாக இடம்பெற்றுவரும் தீவிரவாதத் தாக்குதல்களால் அந்நாட்டு அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் ஒரு அங்கமாக பிரித்தானியாவில் இருந்து வெளியேறிய குற்றவாளிகள் மற்றும் பயங்கரவாதிகள் உள்ளிட்டவர்களின் குடியுரிமையை பறித்து அவர்கள் நாடு திரும்புவதற்கும் அரசு தடை விதித்துள்ளது. பிரித்தானியா அரசின் இந்த…

கிளிநொச்சி அறிவியல் நகரில் ‚குடில் உற்பத்திகள்‘ தொழில்சார் மையம் திறப்பு

ஈழத்து யுத்தத்தில் மிக மோசமான பாதிப்பிற்குள்ளான கிளிநொச்சி மாவட்டம் அறிவியல் நகரில் 'குடில் உற்பத்திகள்' தொழில்சார் மையம் 31.07.2017 திங்கட்கிழமை திறந்துவைக்கப்பட்டது. இலங்கையின் யாழ்ப்பாணத்தினை மையமாகக்கொண்ட 'குடில் தயாரிப்புகள்' நிறுவனமும் இந்தியா கோயமுத்தூர் 'எக்கோ இன்ஜினீயரிங்' அமையமும் இணைந்த கூட்டுப்பணியாக இது இடம்பெற்றது. நிகழ்வில் இலங்கையின் நல்லிணக்க சகவாழ்வு…

யாழில் பொலிஸார் மீது இன்று வாள்வெட்டு; விசாரணைகள் தீவிரம்!

இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்தில் பொலிஸார் மீது இன்றுகாலை வாள்வெட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன. கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மீதே இந்த வாள்வெட்டுச் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது. சம்பவத்தில் படுகாயமடைந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் யாழ்ப்பாணம் போதனா வைத்திய…

சிறீலங்காவின் புதிய இராணுவத்தளபதி வடக்கு முதல்வர் சந்திப்பு

ஸ்ரீலங்காவின் புதிய இராணுவத்தளபதி மஹேஸ் சேனநாயக்கவுக்கும் வடக்குமாகாண முதலமைச்சர் C.V விக்கினேஸ்வரனுக்குமிடையில் இன்றைய தினம் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. மேற்படி இராணுவத்தளபதி புதிதாக பதவி ஏற்றுக்கொண்டதன் பின்னர் முதன்முதலாக யாழ்ப்பாண மாவட்டத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ளார். இந்த நிலையிலேயே அவர் வடக்கு மாகாண முதலமைச்சரைச் சந்தித்துள்ளார். இராணுவத் தளபதி மகேஸ்…

தமிழ் மாணவனின் வியக்க வைக்கும் புதிய கண்டுபிடிப்பு..!

கண்டி வத்தேகம பாரதி வித்தியாலயத்தில் 7ம் தரத்தில் கல்வி கற்கும் விஷ்னு சுதர்ஷன் என்ற 13 வயது மாணவன் சூரிய சக்தியினால் இயங்கக்கூடிய முச்சக்கரவண்டி ஒன்றை உருவாக்கி சாதனை படைத்துள்ளார். இம் முச்சக்கரவண்டி எரிபொருள் ஏதுமின்றி சூரிய சக்தியிலிருந்து இயங்கக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. தனது புதிய கண்டுபிடிப்பை உறுதிப்படுத்தும் வகையில்…

கருப்பு ஜூலை நினைவுகள்

1983-07 25/27 இலங்கை தமிழர் போராட்டத்தின் ஒரு திருப்பு முனையாக பல திருப்பங்களை ஏற்படுத்திய வெலிக்கடை சிறைப்படுகொலை 30 வருடங்களை கடந்து சென்றாலும் அதன் தாக்கம் இன்றுவரை தமிழர்களின் உணர்வுகளில் கலந்துவிட்ட ஒரு வரலாற்று நிகழ்வாகும். இரத்தம் சிந்தி சித்திரவதைப்பட்டு உயிர் நீத்த அந்த தியாகிகளை மீண்டும் மீண்டும்…

18.09.2017 நீதி கேட்டு ஜ.நா நோக்கி-யேர்மனி

தமிழீன அழிவுக்காய் நிதிகேட்டு ஐ.நா நேக்கிய பயணம் ஆரம்பமாகிறது எமது இனத்தின் விடியு  உலக நாடுகளின் ஐ.நா  ஏதாவதுசெய்யாத என்று அபிலாசையோடு  ஆண்டுதோறும் சென்று  எமது ஈழ மண்ணின் நிலையை உரக்கக் கத்துகிறோம் முடிவு  எதுவும் வரவில்லை விடிவும் எமக்கு கிடைக்கவில்லை  இந்த ஆண்டும் எமது பயணத்தில் மாற்றம்…