மரண அறிவித்தல் திருமதி கமலேஸ்வரி திருச்செல்வம்

திருமதி கமலேஸ்வரி திருச்செல்வம்

(சின்னப்பொன்னார்)

மலர்வு : 11 சனவரி 1937 — உதிர்வு : 25 மே 2017
யாழ். கொக்குவில் கிழக்கு பொற்பதி வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட கமலேஸ்வரி திருச்செல்வம் அவர்கள் 25-05-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற மங்கையற்கரசி, கணபதிப்பிள்ளை(சீமாட்டி- சுதுமலை மேற்கு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற திருச்செல்வம் அவர்களின் அன்பு மனைவியும்,

திருகரன்(கொழும்பு), திருச்செல்வி(கனடா), கலைச்செல்வி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான பூபாலசிங்கம், புவனேஸ்வரி, மற்றும் குணரட்ணம்(கனடா), மனோகரன்(கனடா), திருச்செல்வன்(கொக்குவில்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெயக்குமார்(அபுதாபி), ஸ்ரீபவன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

றுமேஸ், கவீசா(தெஹிவளை), அபிலாசா(கனடா), அக்சனா(கனடா), அஞ்சலா(லண்டன்), ஆதிஷ்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-05-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் பொரளை ஜெயரத்ன மலர்ச்சாலையில் நடைபெற்று பின்னர் கனத்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல.7, சாள்ஸ் பிளேஸ்,
தெஹிவளை,
கொழும்பு.
தகவல்
திருச்செல்வி, கலைச்செல்வி
தொடர்புகளுக்கு
மகன் — இலங்கை
செல்லிடப்பேசி:     +94777118732
செல்வி, கலா — இலங்கை
செல்லிடப்பேசி:     +94767748264
செல்வி — கனடா
தொலைபேசி:     +16473454960
கலா — பிரித்தானியா
தொலைபேசி:     +442088610723

Allgemein