பிரபாகரனின் மைத்துனரை கைது செய்யுமாறு கோரிக்கை!

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மைத்துனரான வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் கைது செய்யப்பட வேண்டும் ரியல் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

அத்துடன், விடுதலைப் புலிகளுக்கான நினைவேந்தல் என்ற வார்த்தையை தடை செய்ய வேண்டும் என்றும் சரத் வீரசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார் என சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் நடவடிக்கைகளை சிவாஜிலிங்கம் முன்னெடுத்து வருகிறார். இவ்வாறான நிலையிலேயே அவர் கைது செய்யப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இறுதிக்கட்ட போரில் உயிரிழந்த அப்பாவி மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு வட பகுதியில் உணர்வுபூர்வமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அவ்வாறான நடவடிக்கைகளுக்கு தடை ஏற்படுத்தும் வகையில் சில தரப்பினர் கருத்துக்களை வெளிட்டு வருகின்றனர்.

அந்த வகையில், வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையில், எதிர்வரும் 18ம் திகதி புலிகளுக்கான நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறும் என சிவாஜிலிங்கம் கூறியுள்ளார் என சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Allgemein