அமெரிக்காவில் மூன்றாவது முள்ளிவாய்க்கால் நினைவு பேருரை!!

தமிழீழ தேசிய துக்க நாளாகிய மே18ம் நாளன்று நினைவேந்தல் நிகழ்வுகள் பல்வேறு பிரதேசங்களில் இடம்பெறவுள்ளன.

இந்நிலையில் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 3ஆவது முள்ளிவாய்க்கால் நினைவுப் பேருரை மே 18 ஆம் நாளன்று இடம்பெறவுள்ளது.

இதனைத் தொடர்ந்து வரும் நாட்களான மே 19 முதல் மே 21 வரையான நாட்களில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது பாராளுமன்றின் ஏழாவது அமர்வு இதே நகரில் கூடுகின்றது.

உலகின் பல பாகங்களிலுமிருந்து வரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களும், செனற் சபை உறுப்பினர்களும் இன்றைய கால கட்டத்தில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் சவால்கள் பற்றியும் அவற்றை கையாள்வதற்கு பாவிக்க வேண்டிய உத்திகள் பற்றியும் விவாதிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Allgemein