நந்திக்கடல்’ எதிர்வு கூறலுக்குள் மெல்ல மெல்ல பிரவேசிக்கிறது உலகம்.

இன்று பிரான்ஸ் அதிபர் இறுதிக் கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது. வலதுசாரியான லூபென் தோல்வியடைவார் என்பது கிட்டத்தட்ட உறுதியான விடயம். ஆனால் அவர் இந்தளவு தூரம் வந்தது நவீன உலக ஒழுங்கிற்கு நல்லதொரு உதாரணம்.

நரேந்திரமோடி மற்றும் டொனால்ட் டிரம்ப் போன்றவர்களின் வருகை இந்த உலக ஒழுங்கை மக்களிலிருந்து முற்றாகவே விலத்தும் தன்மையை ஏற்கனவே அடையாளம் காட்டிவிட்டன.

‘நந்திக்கடல’ இவை குறித்து நிறைய உரையாடுகிறது.

இந்த உலக ஒழுங்கின் பிரகாரம் உலக பயங்கரவாத அரசுகளின் துணையுடன் பெரும் மனித பேரழிவுடன் முள்ளிவாய்க்கால் அழித்தொழிப்பு நடந்தபோதே மறுவளமாக இந்த உலக ஒழுங்கு இன்னும் வீங்கிப் பெருத்து உடைப்புக்கு உள்ளாகும் என்று ‘நந்திக்கடல’ எதிர்வு கூறுகிறது.

இது போன்ற பல உலகளாவிய அழிவுகளின் பக்க விளைவே நரேந்திரமோடி, டெனால்ட் ட்ரம்ப் வருகை தொடக்கம் தற்போதைய வடகொரிய பதட்டம் வரை அடுக்கலாம். விளைவாக ஒரு கட்டத்தில் இந்த உலக ஒழுங்கு பெரும் அனர்த்தங்களுடன் தளம்பலைச் சந்திக்கும் என்றும் ‘நந்திக்கடல்’ கணிக்கிறது.

அப்போது உலகின் போராடும் இனங்கள் விழிப்புணர்வுடன் ஒன்றிணைந்து கைகோர்கும் போது இந்த உலக ஒழுங்கை முற்றாகவே நிர்மூலம் செய்து மக்கள் சார் புதிய உலக ஒழுங்கை உருவாக்கலாம் என்றும் அறைகூவல் விடுக்கிறது ‘நந்திக்கடல்’..

இன்றைய லூபென் மட்டுமல்ல நரேந்திரமோடி, டெனால்ட் ட்ரம்ப் போன்றவர்களின் உலக ஒழுங்கு அவர்களது அரசுகளைத் தாங்கும் பெரு முதலாளிகள், நிறுவனங்கள், அமைப்புக்கள; வகுத்து வைத்திருக்கும் உலக ஒழுங்கு.

அதனால்தான் ‘பிரபாகரனியத்தின்’ மைய சரடான ‘நந்திக்கடல் கோட்பாடுகள்’ இந்த பெரு முதலாளிகளின் உலக ஒழுங்கு குறித்து நிறையவே எச்சரிக்கிறது.

விளைவாக ‘நந்திக்கடல்’ நேரடியாக அரசுகளைத் தாக்குவதைவிட அதைத் தாங்கும் பெரு முதலாளிகள், நிறுவனங்கள்; அமைப்புக்கள; வகுத்து வைத்திருக்கும் உலக ஒழுங்கை நிர்மூலம் செய்வது குறித்தே அதிகம் உரையாடுகிறது.

‘பிரபாகரனியத்தின்’ நந்திக்கடல் கோட்பாட்டின் மையமான குறிக்கோள் அரசுகளை நேரடியாகத் தாக்குவது அல்ல. மாறாக அதன் நுட்பத்தை அதன் வடிவத்தைத் தாக்குவதாகும்.

இந்த நிர்மூலமே ஒடுக்கப்பட்டு அடக்கப்பட்டு அல்லலுறும் இனங்களுக்கான உலக ஒழுங்கை தீர்மானிப்பதில் பெரும் பங்கை வகிக்கும் என்கிறது.

தற்போது உலகெங்கும் நடக்கும் மாற்றங்கள் ‘நந்திக்கடல்’ எதிர்வு கூறலின் பிரகாரம், தற்போதைய நவீன உலக ஒழுங்கு வீங்கிப் பெருத்து சுய உடைவுக்கு தயாராகிக் கொண்டிருப்பதை கட்டியம் கூறுகின்றன.

எனவே உலகெங்கும் போராடும் இனங்கள் தம்மை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டிய தருணம் இது.

எந்த நேரமும் ஒரு உலகளாவிய புரட்சி வெடிக்கலாம்.

அப்போது ‘பிரபாகரனியம்’ என்ற நவீன விடுதலைக் கோட்பாடு அந்த புரட்சியை அர்த்தமுள்ளதாக மாற்றும்.

Merken

Allgemein