கொலை வெறி கொண்டவர் என்பதால் பொன்சேகா இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டார்!!

கொலை வெறி கொண்ட மனநிலையில் இருப்பவர் ஒருவர் தேவை என்பதன் காரணமாவே பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, சரத் பொன்சேகாவை இராணுவ தளபதியாக நியமித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

சரத் பொன்சேகா இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறும் தருவாயில் இருந்தார். கொலை வெறி கொண்ட மனநிலையில் உள்ளவர் ஒருவர் தேவை என்பதால், கோத்தபாய அவரை இராணுவ தளபதியாக நியமித்தார்.

பொன்சேகா இராணுவ தளபதியாக இருந்த காலத்தில் இராணுவத்தை அமெரிக்காவிடம் காட்டிக்கொடுத்தார்.

நாட்டில் மக்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்த பிரிவு ஒன்றை ஏற்படுத்தி அதனை சரத் பொன்சேகாவிடம் ஒப்படைக்க போகின்றனர்.

இதனால், நாட்டு மக்களின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பிரசன்ன ரணதுங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Allgemein