கடற்கரும்புலி கப்டன் „ஜெயந்தன் படையணி“ தோற்றம் பெற்று இன்றுடன் 24 ஆண்டுகள் நிறைவடைகிறது.. __________ ________ ________ ________ ______

கடற்கரும்புலி கப்டன் ஜெயந்தன் அண்ணா, கடற்கரும்புலி கப்பன் சிதம்பரம் அண்ணா இருவரின் 26 ஆவது வீரவணக்க நாளும் இன்றுதான்.. அந்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்.. கடற்கரும்புலி கப்டன் ஜெயந்தன் அண்ணா நினைவாக எமது தலைமை இப்படையணியை ஈழ மண்ணில் தோற்றம்பெற வைத்தது.. எம் தலைவர் இப் படையணி பற்றி நிறைய இடங்களில் அநேக தடவை பெருமையாக சாட்சி சொன்ன வரலாறும் உண்டு.. எம் போராட்டத்தில் துரோகம் எனும் நயவஞ்சகம் கருணா எனும் உருவத்தில் பிரதேசவாதம் எனும் கனிப்பொருளில் ஈழ மண்ணில் அரங்கேறிய வேலை தலைவரின் அறிவுரை கேட்டு அந்த துரோக தனத்தை முறியடித்து, துரோகியை நம்பி அவனோடு இருந்த சில போராளிகளையும் மீட்டு எம் தலைமையிடம் ஒப்படைக்க ஜெயந்தன் படையணி செயற்பட்ட விதம் எம் தலைவரை கவர்ந்திருந்து.. அதை அவர் பாராட்டியும் இருந்தார்.. இப் படையணியானது தனது 12 ஆம் ஆண்டு நிறைவை கொண்டாடிய விதம் எதிரிகளையும் துரோகிகளையும் கொலை நடுங்க வைத்தது என்பது வரலாறு.. ஜெயந்தன் படையணியின் தலைமையகம் மட்டக்களப்பு – தரவை பகுதியில் அமைந்திருந்தது.. இங்குதான் இந்த 12 ஆம் ஆண்டு நிறைவு நாள் கொண்டாடப்பட்டது.. எமது தேசியக்காெடியான புலிக்காெடி உயரப் பறக்க படையணியின் கொடி சற்று பனிவில் பறந்தது.. படையணியின் வீர அணிநடை எதிரிகளையும் துரோகிகளையும் நடுநடுங்க வைத்ததே வரலாறு.. இப்படையணி எம் தலைவரில் வைத்திருந்த அன்பும் மதிப்பும் வைராக்கியமும் அளவிட முடியாதவை.. எம் தலைவரும் இப்படையணியை மிக சிறப்பான ஒரு இடத்தில் வைத்திருந்தார்.. ஜெய்சிக்குறு சண்டையில் „இது உங்களின் சண்டை, இந்த சண்டையின் கதாநாயகர்கள் நீங்களே“ என எம் தலைவர் சொல்லுமளவிற்கு அவர்களின் திறமையும், போர்குணமும், வீரமும், அளவு கடந்த துணிச்சலும் தலைவரை கவர்ந்திருந்தது.. சண்டைக்கு வரும் சிங்கள காடையன்கள் ஜெயந்தன் படை சண்டைக்கு வருகிது என்று தெரிந்தால் பின்னுக்கு நின்ற சந்தர்பங்களும் உண்டு. அப்படி எம் தலைவர் படையணிகளை வளர்த்து வைத்திருந்தார்.. இந்த நாள் ஜெயந்தன் அண்ணா மற்றும் சிதம்பரம் அண்ணாவின் 26 ஆவது வீரவணக்க நாளும், எம்படையணி தோற்றம் பெற்று 24 ஆம் நிறைவு நாளுமாயும் இருக்கிறது.. அதேபோல் இன்றைய நாளில் ஈழமண்ணில் வீரகாவியமான அணைத்து மாவீரர்களுக்கும் எம் வீரவணக்கத்தையும் செலுத்துகிறோம்…

Allgemein