அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கை வந்தவர் வெள்ளை வானில் கடத்தப்பட்டார்!

அவுஸ்திரேலியாவிலிருந்து அண்மையில் இலங்கை வந்திருந்த யாழ்ப்பாணத் தமிழர் ஒருவரை இராணுவப் புலனாய்வாளர்கள் வெள்ளை வானில் கடத்திச் சென்று சித்திரவதை செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட குறித்த நபர் அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்றுக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவரது நிஜப் பெயரை வெளியிடாமல் குமார் என அவுஸ்திரேலிய ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை அவுஸ்திரேலியாவில் பல ஆண்டுகள் வசித்து வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குறித்த நபர் தனிப்பட்ட காரணங்களுக்காக சிறீலங்கா சென்ற வேளையே கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டுள்ளார்.

“சிறீலங்காவிற்குள் நான் சென்ற இரு வாரங்களுக்குள் கடத்தப்பட்டேன். என்னையும் எனது இரு சகோதரர்களையும் வெள்ளை வானில் வந்த இனந்தெரியாத நபர்கள் கடத்திச் சென்றனர்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த நபரையும், அவரது சகோதரர்களையும் கண்ணைக் கட்டி இழுத்துச்சென்ற இனந்தெரியாத நபர்கள் இரத்தக்கறைகள் காணப்பட்ட அறையில் அடைத்து வைத்திருந்ததாகவும், அதேவேளை ஆடைகள் களையப்பட்டு நிர்வாணமாக அறையொன்றினுள் வைத்திருந்ததாகவும் நாயைப் போல தரையில் உறங்கினேன்” என்று அவர் அவுஸ்திரேலிய ஊடகத்துக்குத் தெரிவித்துள்ளார்.

“என்னை அவர்கள் பாலியல் ரீதியிலான வன்முறைகளுக்கும் உட்படுத்தினர். பின்னர் சூடான இரும்பினால் எனது உடலில் தாக்கினர். நான் அவ்வேளை மரணிக்கப்போகின்றேன் என நினைத்தேன். பின்னர் மயக்கமடைந்துவிட்டேன்” என்றும் குறித்த நபர் தெரிவித்துள்ளார்.

மேலும் தனது உறவினர் பணம் வழங்கியே தன்னை மீட்டெடுத்தார் என்று அவுஸ்திரேலிய ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் பருத்தித்துறை மாதனையைச் சேர்ந்த திரு.குகச்செல்வம் கோபாலகிருஸ்ணன் (வயது32) அண்மையில் பிரான்சிலிருந்து நாடு திரும்பியவர். 06-04-2017 அன்று மாலை 5.00 மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியாவுக்கு பயணம் செய்தவர் கடைசியாக வவுனியா பிரதான பேருந்து நிலையத்தில் பார்த்துள்ளனர்.

இதன் பின்னர் இவர் தொடர்பாக எந்த தகவலும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது

Allgemein