வட கொரியா பிரச்சனைக்கு இது தான் ஒரே தீர்வு: போப் பிரான்ஸ்

 

 

வட கொரியாவின் அணு ஆயுத பிரச்சனை சிக்கலை தீர்க்க மூன்றாம் தர பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என போப் பிரான்ஸிஸ் கூறியுள்ளார்.

வட கொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை நடத்தி உலக நாடுகளை பீதியில் ஆழ்த்தி வருகிறது.

அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளை அழித்து விடுவோம் எனவும் மிரட்டி வருகிறது.

இந்நிலையில், கெய்ரோவிலிருந்து விமானத்தில் பயணம் செய்த போப் பிரான்ஸிஸ் பயணிகளிடையே இது குறித்து பேசினார்.

அவர் கூறுகையில், அணு ஆயுதங்களால் ஏற்படும் பேரழிவை தவிர்க்க வேண்டும்.

வட கொரியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையேயான பிரச்சனையை தீர்க்க நார்வே போன்ற மூன்றாம் தரப்பு நாடு பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

உலகம், அழிவு தரும் அணு ஆயுத சிக்கலை எதிர்கொண்டுள்ள இந்த நேரத்தில் போர் ஏற்பட்டால் மனிதர்களின் ஒரு பகுதி அழிந்து விடும் என போப் தெரிவித்துள்ளார்.

மேலும், அடுத்த மாதம் ஐரோப்பாவில் இது குறித்து பேச அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை சந்திக்க தயாராக இருப்பதாக போப் கூறியுள்ளார்.

Merken

Allgemein