தமிழ் அரசியல் கைதிகளுக்கு வைத்திய சிகிச்சைகள் மறுப்பு

கொழும்பில் அமைந்துள்ள மெகசின் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு வைத்திய சிகிச்சைகள் மறுக்கப்பட்டுவருவதாக தமிழ் அரசியல் கைதிகளை விடுவித்துக்கொள்வதற்கான தேசிய அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

கொழும்பு மெகசீன் சிறைச்சாலையில் வேலாயூதம் வரதராஜன் என்ற தமிழ் அரசியல் கைதியொருவர் சிகிச்சைக்காக வெலிக்கடை சிறைச்சாலை மருத்துமனைக்கு அழைத்துச்செல்லப்பட்ட நிலையில் மிகவும் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

1999ஆம் ஆண்டு இடம்பெற்ற முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டராநாயக்க மீதான தற்கொலைத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ள வரதராஜன் என்ற தமிழ் அரசியல் கைதி கடந்த 21ஆம் திகதி சுகயீனமுற்ற நிலையில் சிறைச்சாலை வைத்திய அதிகாரியின் பணிப்புரைக்கு அமைய வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.

வைத்தியசாலையில் இருந்த சந்தர்ப்பத்திவல் இவர் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளதாக தமிழ் அரசியல் கைதிகளை விடுவித்துக்கொள்வதற்கான தேசிய அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை மாரிமுத்து சத்திவேல் தெரிவிக்கின்றார்.

Allgemein