முல்லைத்தீவு-வட்டுவாகல் கடற்படைத்தளம் பாதுகாப்பற்ற பகுதியாக அண்மையில் கடற்படையினர் கூறியதுடன் அறிவித்தல் பலகையும் நாட்டி தெரியப்படுத்தியிருந்தனர்.
இந்த நிலையில் அந்த அறிவித்தல் பலகை தற்பொழுது சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வட்டுவாகல் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரை உள்ள மக்களின் 657 ஏக்கர் காணிகளை கடற்படையினர் ஆக்கிரமித்து வைத்துள்ளதாக பொதுமக்கள் தொடர்சியாக குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் முள்ளிவாய்க்கால் பிரதேசத்தை கடற்படையினர் பாதுகாப்பற்ற பகுதியாக அறிவித்துள்ளமை தமது சொந்தக் காணிகளை கடற்படையினர் கையளிக்க மறுப்பதன் வெளிப்பாடாகவே கருதமுடியும் என காணி உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில் கடற்படையினரின் சூனியப் பிரதேசம் என குறிப்பிடப்பட்டு நாட்டப்பட்டிருந்த அறிவித்தல் பலகைகள் தற்பொழுது சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்து.