அழகுறு மழலையரை
அறியாப் பிஞ்சுகளை
அழித்தொழித்த
அரகன் இழி குடியே…..
ஒரு பாவமறியாத
உன் பகை அறியாத
சிசுவை சிதைத்த நீ
புத்தனின் வித்தா எத்தனே
குருதி வழிந்தோட
குடல் உருவி
கொன்றொழித்த நின்
கொட்டம் அடக்கப்படும்
அழகுச் செல்லங்களை
அறுத்தெறிந்து
ஆர்ப்பரித்த உன்
ஆண்மை நசுக்கப்படும்
காலம் மாறும்
காட்சிகள் மாறும்
காத்திரு பகையே…..
காத்திரு பகையே……
-கவிஞர் தம்பியின் தம்பி