கிளிநொச்சியில் கடந்த மூன்று மாத காலப்பகுதியில் 193 அபாயகரமான வெடிப்பொருட்கள் மீட்பு

பச்சிலைப் பள்ளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட புலோப்பளை பிரதேசத்தில் 2017 ஆம் ஆண்டின் 03 மாத காலப் பகுதியில் 26, ஆயிரத்து 500, சதுர மீற்றர் பரப்பளவில் இருந்து 193, அபாயகரமான வெடிப்பொருட்கள் அகற்றபட்டுள்ளதாக மனித நேயக் கண்ணி வெடியகற்றும் கலோற்றஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மனித நேயக் கண்ணி வெடியகற்றும் கலோற்றஸ் நிறுவனம் வெடிப்பொருட்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள ‘ஷார்ப்’ நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆலோசகர் பிரபாத் நாரம்பனவ இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் முகமாலை பிரதேசத்தில் உள்ள புலோப்பளை பகுதியில் 285,689, சதுர மீற்றர் பரப்பளவில் வெடிப் பொருட்களை அகற்றும் பணியினை இலக்காகக் கொண்டு களமிறங்கியிருந்தோம்.

இந்த நிலையில், இது வரை நிறைவடைந்துள்ள 03, மாதங்களில் 26, ஆயிரத்து 500, சதுர மீற்றர் பரப்பளவில் இருந்து அபாயகரமான வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதன் போது மிதி வெடிப்பொருட்கள் 103, மிக ஆபத்தான வெடிப்பொருட்கள் 81, வானத்தை தகர்க்கும் வெடிப்பொருட்கள் 09, உள்ளடங்களாக மொத்தமாக 193, வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்த அபாயகரமான வெடிபொருட்களை மீட்கும் பணியில் 44, பணியாளர்கள் உட்பட மொத்தம் 66 பேர் ‘ஷார்ப்’ நிறுவனத்தில் கடமையாற்றி வருகின்றனர்.

இவர்கள் தொடர்ந்து யுத்த களமாக இருந்த பிரதேசத்தில் பணியில் ஈடுபட்டு வருவதால் மனநிலையில் ஏற்படும் பாதிப்புக்களை தவிர்க்கும் வகையிலும், மனநிலையில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையிலும் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Allgemein