சர்வதேச மன்னிப்புச் சபையின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் வடக்கு மாகாண முதலமைச்சரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இச் சந்திப்பு வடமாகாண முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் இன்று இடம்பெற்றது.
இச்சந்திப்பில் சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச் செயலாளர் சலில் செட்டி உட்பட முகாமைத்துவக் குழுவினர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.