இலங்கையில் ஒரு ஊரையே கலக்கும் சேவல்!

வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டி இயங்கத்தொடங்கினால் எங்கிருந்தாலும் ஒடி வந்து அதனைப் பார்வையிடும் சேவலொன்று தொடர்பான தகவலொன்று வெளியாகியுள்ளது. ஹேமாத்தகம, பெதிகம்மன பிரதேசத்திலேயே இக்காட்சியை காணக்கிடைக்கின்றது. கடந்த 8 மாதங்களாக குறித்த சேவல் தொலைக்காட்சி பார்க்க வருவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். அதிலும் கார்டூன் பார்ப்பதென்றால் இச்சேவலுக்கு அவ்வளவு விருப்பமாம்.…

வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியதால் சர்வதேசத்திடம் அடிபணிந்துள்ளோம்: சம்பந்தன்

சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாது, அநீதிகள் இழைக்கப்படுவதால், தாம் சர்வதேசத்திற்கு அடிபணிந்து இருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தர் குறிப்பிட்டுள்ளார். தேசிய இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் திருகோணமலையில் ஆரம்பமான ‘யொவுன்புர’ இளைஞர் முகாமை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு…

இன்று தந்தை செல்வா பிறந்த தினம்:

"கடவுள் தான் தமிழரைக் காப்பாற்ற வேண்டும்" என்று முயற்சியின் முடிவில் சொன்னார். கடவுள்கள் பின்னாளில் வந்து சென்றும் தமிழர்களைக் காப்பாற்ற முடியாமல் போனதற்கு காரணமும் தமிழர்கள் தான் என்பதை அவர் அறியாமற் போனார் என்பதே கவலை. தமிழர்களுக்கான ஆதரவுக் குரலாய் அவர் இருந்தார் எனினும், பிரதேசவாதம் பேசினார் என்ற…

சொந்தமாக ரயில் வைத்திருந்த தமிழரைப் பற்றி தெரியுமா?

  சொந்தமாக ரயில் வைத்திருந்த தமிழரைப் பற்றி தெரியுமா? சென்னையில் ஒரு ரயில் நிலையம், சேத்துப்பட்டு என்ற பெயரில் உள்ளதே; அதைத் தெரியுமா? தனி மனிதர் ஒருவர் சொந்தமாக கார், பேருந்து, விமானம் ஏன் கப்பல் கூட வைத்திருப்பார்கள்? ஆனால், சொந்தமாக ரயில் வைத்திருக்கிறார்களா? ஆம், தமிழர் ஒருவர்…

ஆட்சியாளர்களின் நடிப்பால் வடக்கு, கிழக்கு மக்களுக்கு தீர்வு கிடைக்கப் போவதில்லை: சுதந்திர பெண்கள் அமைப்பு

ஆட்சியாளர்கள் அரங்கேற்றிவரும் நாடகங்கள், வடக்கு கிழக்கு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு ஒருபோதும் தீர்வை பெற்றுக்கொடுக்கப் போவதில்லையென தென்னிலங்கையைச் சேர்ந்த சுதந்திர பெண்கள் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் திருகோணமலையில் கடந்த 25 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டத்தில் இன்று (புதன்கிழமை) சுதந்திர பெண்கள்…

ஈழத்தின் இறுதிப்போர் காலத்தில் உறவினர்கள் அடையாளம் காண்பதற்காய் மாவீரர் உடல்கள் வைக்கப்பட்ட இடம்.

ஈழத்தின் பெரும்போர் 2009இல் முள்ளிவாய்க்கால் நோக்கி நகர்ந்த காலத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் அணியில் மரணிப்பவர்களின் உடல்கள் முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் அமைந்திருந்த இந்த பொதுச்சந்தை கட்டடத்தில் வைக்கப்பட்டிருக்கும். இலட்சக்கணக்கான மக்கள் சிறு பகுதிக்குள் நிறைந்திருந்தனர். ஒருவர் மரணித்தால் அவரின் உறவினர்க்கு தகவல் கொடுக்க வாய்ப்பு மிக அரிது.…

அறத்தின் ஒருவடிவோ?

வீ. பரந்தாமன் புயலுக்குத் தென்றலுக்குப் பூபதியும் பேராமோ? அன்னைஇவள் தானே அறத்தின் ஒருவடிவோ? “காவலர்நாம் என்றுவந்து கன்னமிட்ட இந்தியனே! பாவங்கள் எத்தனையோ அத்தனையும் பண்ணிவிட்டாய்! அங்காடி யா? அன்றி, ஆரும் வரப்போகச் செங்கன் விலைமாதர் சேரியா ஈழமிது? ஏப்பமிட வந்தாய்நீ எங்களது மண்ணைத்தான் கூப்பிட்டா வந்தாய்? கொடியவனே கொள்ளிவைக்க!…

ஜெனீவா கைவிரிப்பானது காத்திருப்பிற்கானதன்று; களமாடுவதற்கான ஆணையே! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

தமிழினவழிப்பின் மைய்ய சூத்திரதாரியான சிறிலங்கா அரசிற்கு அது தொடர்பான விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இரண்டு ஆண்டுகள் கால அவகாசத்தினை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை வழங்கியுள்ளமையானது, நாம் அதுவரை காத்திருப்பதற்கானதன்று களமாடுவதற்கான ஆணையே என்பதை உலகத் தமிழர்கள் உணர்ந்துகொண்டு செயலாற்ற வேண்டும். சூரியனின் மறைவை காணாத வகையிலான…