Oktober 15, 2024

நாடாளுமன்றத் தேர்தலில் சங்கு சின்னத்தில் போட்டியிடுவேன் – கோவிந்தன் கருணாகரம்

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியாக குத்துவிளக்குக்கு பதிலாக சங்கு சின்னத்தில் களமிறங்கவுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார். 

மட்டக்களப்பில் இன்று திங்கட்கிழமை (30) அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலளார் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். 

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசியத்தின் மீது பற்றுக்கொண்ட இளைஞர்களை இணையுமாறும் அவர் அழைப்பு விடுத்தார். 

 இலங்கை தமிழரசுக்கட்சியின் அழைப்பு தொடர்பில் எதிர்காலத்தில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு தீர்மானிக்கப்படும் எனவும் கருணாகரம் தெரிவித்தார். 

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert