இன்று தமிழ் தரப்புடன்:வெள்ளி அனுரவுடன்!
இந்திய உயர் உயர்ஸ்தானிகர் மற்றும் தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு இடையில் முக்கிய சந்திப்பு ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.
இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தமிழ்க் கட்சிகளை அழைத்து கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் இன்று பிற்பகல் கலந்துரையாடியுள்ளார்
இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி, தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்க் கட்சிகளுடனான இந்திய உயர்ஸ்தானிகரின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகின்றது.
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அடுத்த வாரம் புதிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
இதன்படி, ஒரு நாள் விஜயமாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை (ஒக்டோபர் 4ஆம் திகதி) அவர் இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.