Oktober 15, 2024

சங்கா? குத்துவிளக்கா??

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது தொடர்பாக தமிழ்த் தேசிய பொது கட்டமைப்பினர் நேற்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் கலந்துரையாடியிருந்தனர்.

 யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

தமிழ்த் தேசிய பொது கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் கட்சிகள் நேற்று முன்தினம் புதன்கிழமை  கலந்துரையாடிய நிலையில் நேற்றைய தினம் இரண்டாவது கட்டமாக இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர்  தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் சட்டத்தரணி என்.ஸ்ரீகாந்தா, தமிழ் மக்கள் கூட்டணியின் பொருளாளர் வி.பி.சிவநாதன், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின், பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன், ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன், தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடகப்பேச்சாளர் க.துளசி, அரியநேத்திரன், அரசியர் ஆய்வாளர்களான ம.நிலாந்தன், யதீந்திரா உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

குறித்த கலந்துரையாடலில் எந்த சின்னத்தில், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது என்பது தொடர்பிலையே முக்கியமாக பேசப்பட்டதாகவும், இறுதி முடிவு எட்டப்படவில்லை எனவும் ஓரிரு நாட்களில் முடிவு எடுக்கப்பட்டு விடும் என தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட சங்கு சின்னத்தில் போட்டியிடுவதா அல்லது ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பாக குத்துவிளக்கு சின்னத்தில் போட்டியிடுவதா என்பது தொடர்பிலையே பேச்சுக்கள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert