Oktober 15, 2024

சூடு சுரணையற்ற அரசியல்!

யாழ்ப்பாணத்தில் சூடு சுரணையற்ற அரசியல் கலாச்சாரம் வேகமாக சந்தர்ப்பவாத அரசியலாக பரவிவருகின்றது. 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும்  இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு யாழ்ப்பாணம் காங்கேசன்துறையிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றுள்ளது.

முன்னதாக தமிழரசு தலைமை சஜித் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்த நிலையில் அதனை மாவை வரவேற்றிருந்தார்.

எனினும் முன்னதாக மாவை மகன் கலையமுதனோ சஜித்துடன் இணைந்த போதும் பின்னர் ரணிலிற்கு கைதூக்கியிருந்தார்.

ஆனால் இன்னொரு புறம் கலையமுதனின் முன்னாள் மனைவியும்  மாமனிதர் ரவிராஜின் மகளும் மற்றும் மனைவியுமான சசிகலாவும் ரணிலுக்கு ஆதரவாக தூக்கியிருந்தனர்.

சசிகலா சாவகச்சேரியிலும் மகள் கொழும்பிலுமாக ரணிலுடன் புகைப்படமும் கூட எடுத்துக்கொண்டனர்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert