Oktober 15, 2024

ஆறு வயதில் மட்டக்களப்பு மாணவி உலக சாதனை!

மட்டக்களப்பை 6 வயதுடைய காவ்யஸ்ரீ என்ற மாணவி உலக சாதனை ஒன்றை நிலைநாட்டி உள்ளார்.

காவ்யஸ்ரீ , மூன்று, நான்கு, ஐந்து மற்றும் ஆறு வரிசைகளைக் கொண்ட 200 கூட்டல் மற்றும் கழித்தல் கணக்குகளுக்கு 6 நிமிடங்கள் 50 வினாடிகளில் விடையளித்து சோழன் உலக சாதனை படைத்துள்ளார்.இச் சாதனை நிகழ்வு நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது. காவ்யஸ்ரீ, மட்டக்களப்பு பொறியாளர் சுப்ரமணியம் மற்றும் மருத்துவர் ஹிசாந்தினி ஆகியோரின் மகளாவார்.இந் நிகழ்வை சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனம், பீபல்ஸ் ஹெல்பிங், பீபல்ஸ் பவுண்டேஷன் மற்றும் கதிரவன் சமூக அபிவிருத்தி நிறுவனம் போன்ற அமைப்புகள் இணைந்து நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.   

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert