Oktober 15, 2024

கிளிநொச்சியில் நிலவும் கடும் வறட்சியால் பலர் பாதிப்பு.

தற்பொழுது  ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பலர் பாதிப்புக்களை எதிர்கொள்கின்றனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பாரதிபுரம் பகுதி மற்றும் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கண்டாவளை உள்ளிட்ட பல பகுதிகளில் தென்னை செய்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் கடும் வறட்சி காரணமாக வாழை, கமுகு உள்ளிட்ட பல பயிர்கள் அழிவடைந்து வரும் நிலை காணப்படுவதாக செய்கையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். 

தற்பொழுது நாட்டில் தேங்காய்க்கு பெரும் கிராக்கி நிலவிவரும் நிலையில், தென்னை செய்கை மேற்கொள்ளப்பட்டு எட்டு வருடம் 9 வருடம் கடந்த நிலையில் பயன்தரக் கூடிய நிலையில் இருந்த பலரது தென்னைகள் அழிவடைந்து வருவதாக தெரிவிக்கின்றனர்.

அதேபோன்று வாழைச் செய்கையிலும் வறட்சியால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதோடு கமுகு போன்றவையும் அழிவடையும் நிலையில் காணப்படுவதாவும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர். 

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert