தியாக தீபத்திற்கு சந்தோஷ் அஞ்சலி

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு தனது பாரியாருடன் சென்று அஞ்சலி செலுத்தினார். 

யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வருகை தந்துள்ள சந்தோஷ் நாராயணன் , மாலை யாழ்ப்பாணத்தை சேர்ந்த கலைஞர்களை யாழில் உள்ள விருந்தினர் விடுதியில் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். 

அதேவேளை சந்தோஷ் நாராயணனின் மனைவி யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியை சேர்ந்தவர் என்பதும் , அடுத்த மாதம் யாழ்ப்பாணத்தில் சந்தோஷ் நாராயணன் பெரியளவிலான இசை நிகழ்வொன்றினை நடாத்த திட்டமிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert