ரணில் விக்கிரமசிங்கவின் வருகையை எதிர்த்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
தமிழினப்படு கொலையாளி ரணில் விக்கிரமசிங்க லண்டன் வருகையை எதிர்த்து பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரினால் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டமானது மத்திய இலண்டனில் One George Street, SW1P 3AA (Westminster நிலக்கீழ் புகையிரத நிலையத்திற்கு அருகில்) நூற்றுக்கணக்கான புலம் பெயர் தமிழர்கள் இணைந்து இன்று ( 19/06/2023) மாலை 3:30 மணியில் இருந்து ஈடுபட்டு வருகிறார்கள். தங்களுடைய எதிர்ப்பினை பதாகைகளை கையிலேந்தியும் கொட்டொலிகளை எழுப்பியும் தெரிவித்து வருகிறார்கள்.