April 20, 2024

யாழில் விகாரைகளை தடுக்க பல இடங்களில் இதனை அமைக்க வேண்டும்!

இலங்கை சிங்களவர்களுக்கு பன்சலைகளில் இந்த நாடு ஒரு சிங்கள பௌத்த நாடு என்ற கருத்து ஆழமாக ஊன்றப்படுகின்றது.

சர்வதேச ரீதியாக இந்த நாட்டை சிங்கள பௌத்த நாடாக கட்டமைக்க ஆட்சியாளர்கள் விரும்புகிறார்கள். இதன் முதல் கட்ட வேலைகள் தான் வடக்கு கிழக்கு எங்கும் விகாரைகள் அமைக்கப்படுவது. எங்கள் மண்ணின் பெருமைகளையும் கலை கலாசார பண்புகளையும் எடுத்து காட்ட உதவும்.

யாழில் விகாரைகளை தடுக்க பல இடங்களில் இதனை அமைக்க வேண்டும்! | Jaffna Vihara Build Stop Welcome Curves Set Up

உள்ளே காலை வைக்கும் எந்த இனத்துக்கும் இந்த மண் எப்படி பட்டது என்று புரியும். வெளியே இருந்து வரும் எவராக இருந்தாலும் இங்கு எமது மொழியை மரபை பண்பை அறிந்து கொண்டு செயல் பட வேண்டும்.

இந்த ஊருக்கு வருபவர்களிடம் தமிழில் பேசு கொச்சை சிங்களத்தை புறம் தள்ளு. வடக்கில் சைவத்தையும் தமிழையும் போற்றி காத்த ஆறுமுக நாவலர் அவர்களுக்கு யாழ் நகர சூழலில் மிகப் பிரம்மாண்டமான சிலை அமைக்க வேண்டும். முடிந்தால் ஆரிய குளத்தின் நடுவில் அமைக்க வேண்டும்.

யாழில் விகாரைகளை தடுக்க பல இடங்களில் இதனை அமைக்க வேண்டும்! | Jaffna Vihara Build Stop Welcome Curves Set Up

மத அடையாளங்கள் தான் அமைக்க கூடாது. இவர் தேசிய வீரர் தானே. அரச செலவில் அரசே அமைக்கலாம். மாநகர சபை நடவடிக்கை எடுக்க வேண்டும். நிச்சயமாக குளங்கள் அரச மரத்தடியில் புத்தர் வெசாக்கிற்கும் பொசனுக்கும் குடியேறுவார். அதற்கு முன் பிள்ளையாரை குடியேற்ற வேண்டும்.

முருகன், பிள்ளையார் கூட சிங்கள தெய்வங்கள் ஆவது உண்டு. கணபதி தெய்யோ, விஷ்ணு தெய்யோ என்று புது விகாரைகள் வரலாம். சிவலிங்கம் பிரதிட்டை செய்ய வேண்டும்.

யாழில் விகாரைகளை தடுக்க பல இடங்களில் இதனை அமைக்க வேண்டும்! | Jaffna Vihara Build Stop Welcome Curves Set Up

இனி வரும் காலத்தில் காணிகளை வெளிநபர்களுக்கு விற்பனை செய்வதை தவிர்த்து உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு இருக்கும் அதிகாரங்களை உச்ச அளவில் பயன் படுத்தி சட்ட விரோதமாக கட்டப் படும் கட்டடங்களை தடுத்து நிறுத்த வேண்டும்.

சாதிக்கு ஒரு கோயில் கட்டி அதை வழிபாடு செய்ய விடாமல் தடுக்காமல் எல்லோரும் வழிபட இடங்கொடுங்கள். வீதிகளின் அருகில் உள்ள கோயில்களை புனரமைத்து அடையாளங்களை பலப்படுத்துங்கள்.

ஊரில் இருக்கும் குளங்கள், கடற்கரை ஆகிய பகுதிகளில் உள்ள கோயில்களை பெரிதாக கட்டுங்கள்.நாங்க சாமி கும்பிடுறோமோ இல்லையோ கோயில் மூலம் எமது இருப்பை தக்க வைக்க வேண்டும்.

முக்கிய நகரங்களில் திருவள்ளுவர் சிலை, நாவலர் சிலை என்பன வைக்க வேண்டும்.முடிந்தால் நாவலரை பொது மக்கள் கூடும் கடற்கரைகளில் அமைக்க வேண்டும்.

யாழ்ப்பாணத்துக்குள் நுழையும் போது சைவமும் தமிழும் சிங்களவர்களுக்கு மணக்கும் வகையில் வீதி தோறும் வரவேற்பு வளைவுகளை அமைத்து ஒரு அடையாள புரட்சி ஏற்படுத்தலாம். இதை தடுப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை.

யாழ் பண்ணை கடற்கரையில் தமிழ் மன்னர்களின் சிலைகள், தமிழுக்கு தொண்டாற்றிய பெரியவர்கள் போன்றோரின் சிலைகள் நிறுவப்பட வேண்டும்.

யாழ்ப்பாணத்தில் எத்தனை விகாரைகள் கட்டினாலும் அத்தனையையும் இந்த வரவேற்பு வளைவுகளை கொண்டு மூழ்கடித்து விடலாம்.

கட்ட வேண்டிய இடங்கள் சிங்களவன் எங்கு எங்கு விகாரைகள் அமைக்க ஆசைப் படுறானோ அதற்கு முன் அந்த அந்த இடங்களில் பிரமாண்டமான வரவேற்பு வளைவுகளை அமைக்க வேண்டும். முகநூலில் Vigneshwaran Senthuran என்பவர் குறித்த பதிவையிட்டுள்ளார்.

  •  நல்லூர் நான்கு வீதிகள்
  • ஆறுகால் மடத்தடி
  • மருதனார் மடம்
  • சுன்னாகம் சிவன் கோயில் வீதியில்
  • துர்க்கை அம்மன் கோவிலடி
  • கீரிமலை செல்லும் வீதியில்
  • காரைநகர் சிவன் கோயில்
  • தொன்டமனாறு பின் வீதி
  • வல்லை
  • வள்ளிபுர கோவில் செல்லும் வீதியில் 
  • நயினாதீவு செல்லும் வீதியில்
  • மானிப்பாய் பிள்ளையார் கோயில்
  • வல்வெட்டித்துறை ஆலடி
  • நாகர் கோயில்
  • சாட்டி 

இதை விட அந்த அந்த ஊர்களுக்கு உள் நுழையும் இடங்களில் அமைக்க பட வேண்டும்.

  • வலிகாமம் 
  • வடமராட்சி
  • தென்மராட்சி 
  • தீவகம் என்றவகையில் அமைக்க பட வேண்டும்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert