April 20, 2024

அவுஸ்திரேலிய நாடாளுமன்றில் ஒலித்த ஈழத் தமிழரின் இனப்படுகொலை கதை!

தமிழ் அகதிகள் பேரவையின் பிரதிநிதிகள் குழு 2023 ஆம் ஆண்டு மார்ச் 6 ஆம் திகதி அவுஸ்திரேலிய சுயேச்சை உறுப்பினர் லிடியா தோர்பேவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இச் சந்திப்பின் போது தமிழ் அகதிகளின் கதைகளையும் அவர்களின் தனிப்பட்ட மற்றும் தமிழீழத்தில் நடந்த இனப்படுகொலையின் சாட்சிகளையும் லிடியா தோர்பேவுடன் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில், இன்று (21.03.23) லிடியா தோர்ப், அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் 33 வயதான ஈழத் தமிழரின் இனப்படுகொலை தொடர்பான உரையை வாசித்துள்ளார்.

தமிழீழத்தில் நடந்த இனப்படுகொலையை நேரில் கண்ட அவரது கதையை அந்த உரை வெளிச்சம் போட்டுக் காட்டியது.

இவ்வுரையின் போது, லிடியா தோர்ப், இனப்படுகொலையை அங்கீகரிப்பது அவசியம் என்றும், அகதிகளுக்கு எதிரான அவர்களின் சித்திரவதை வடிவங்களையும், ஈழத் தமிழர்களுக்கு எதிரான இலங்கை இனப்படுகொலைக் குற்றங்களில் அவர்கள் மெத்தனமாக இருப்பதையும் ஒப்புக்கொள்ளுமாறு குடிவரவுத் துறைக்கு இதன்போது அழைப்பு விடுத்துள்ளார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert