März 28, 2024

யாழில் சமூக சேவையில் சத்தியராஜ் மகள்!

நெடுந்தீவில்  சமூக சேவையில் ஈடுபடும் தன் மகளை நடிகரும் தமிழ் உணர்வாளருமான சத்யராஜ்  பாராட்டியுள்ளார்.

“இலங்கையில் உள்ள வடக்கு மாகாண பகுதியில் அமைந்திருக்கும் நெடுந்தீவில் பசுமைப்பள்ளி, பசுமைச் சமூதாயம் என்ற பெயரில் ஈழத்து காந்தி என அழைக்கப்படும் தந்தை செல்வாவின் பேத்தியாகிய பூங்கோதை சந்திரகாசனும், என்மகள் திவ்வியா சத்தியரா ஜும் இணைந்து, ஒரு அற்புதமான திட்டத்தை துவங்கியுள்ளனர்.  இதில் நான் மிகவும் பெருமையும், மகிழ்ச்சியும் அடைகிறேன். அந்த திட்டத்தில் பல பயனுள்ள விஷயங்கள் அடங்கியிருக்கிறது.

முதலாவது குழந்தைகளின் கல்வி, எதிர்காலம், விவசாயம் என்ற ஒரு அற்புதமான தொழிலை கற்றுக்கொள்வது, அதில் அந்தக் குழந்தைகளின் பெற்றோர்களையும் ஈடுபடச் செய்து எதிர்காலத்தில் அவர்கள் நல்ல தொழிலை கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு என அவ்வளவு நல்ல விசயங்களும் அடங்கியிருக்கின்றன.

இது இந்தநேரத்தில் மிகவும் பயனுள்ள, மிகவும் அவசியமான, சிறப்பான ஒரு சமூகப் பணியாகும். இந்தப் பணியை பூங்கோதை சந்திரகாசனும் எனது மகள் திவ்வியா சத்தியரா ஜும் இணைந்து செயற்படுவதை நினைக்கும் போது, எனக்கு புரட்சித் தலைவர் அவர்களின் ஒரு  பாடரல வரி நினைவுக்கு வருகிறது. 

”நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி

சின்னஞ்சிறு கைகளை நம்பி ஒரு சரித்திரம் இருக்குது தம்பி.”

ஈழத் தமிழர்களின் நலனுக்காக என்மகள் திவ்வியா சத்தியராஜ் தொடர்ந்து உழைப்பார்.

நன்றி.

சத்தியராஜ்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert