März 29, 2024

முதல்வரிசையில்லை: சாணக்கியனை காணோம்?

முன்வரிசையில் செல்ல அனுமதிக்கப்படாமையால் இரா.சாணக்கியன் வடக்கிலிருந்து கிழக்கைநோக்கி சென்ற வடக்கு – கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் பேரணியை; புறக்கணித்துள்ளார்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்தை எம்.ஏ.சுமந்திரனுடன் இணைந்து குழப்பியது அனைவரும் அறிந்த உண்மை.ஆனாலும்  உண்மையான ஊடகவியலாளர்கள் சிலர் தலையிட்டு அப்போது போராட்டத்தை வெற்றிகரமாக முடித்திருந்தனர்.

அதே போல், வடக்கில் இருந்து கிழக்கு நோக்கிய போராட்டத்தை குழப்புவதற்கு இரகசியமாக முயற்சித்த போது போராட்டக்காளிடம் கையும் களவுமாக இரா.சாணக்கியன் சிக்கியதால் அவரின் சில சதி வேலைகள் தடுக்கப் பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வடக்கு – கிழக்கு அரசியல் பிரமுகர்கள் அனைவரும் கலந்து கொண்டு ஆதரவு வழங்கிய போதும் தான் போராட்டத்திற்கு முன்னால் வருவதற்கு போராட்டக்காறர்கள் அனுமதிக்காத காரணத்தால், சாணக்கியன் அரசியல் சித்து விளையாட்டடை அரங்கேற்றியுள்ளார்.

அதனடிப்படையில் இறுதி நிழ்வில் கலந்துகொள்ளவேண்டாம் என்று தனது ஆதரவாளர்களை தடுத்துள்ளார் சாணக்கியன்.

தமிழ் மக்கள் தாமாகவே முன்வந்து தமது அபிலாசைகளை வெளிஉலகிற்குச் சொல்லுவதை சாணக்கியன் விரும்பவில்லை காரணம் மரண வீட்டில் பிணமாகவும் திருமண வீட்டில் மாப்பிளையாகவுமே இருப்பதற்கு சாணக்கியன் ஆசைப்படுவது இன்றைய மட்டக்களப்பின் நிலை.

சாணக்கியனின் தாரக மந்திரம் தமிழ் மக்கள் தமக்காகப் போராடக் கூடாது, மாறாக அரசியல்வாதிகள் போராடுகின்றபோது அவர்களுக்குப்பின்னால்தான் நிற்கவேண்டும்  அதனை பின்பற்றா விட்டால் இன்று மட்டக்களப்பில் இடம் பெற்றதுவே நடக்கும் என்பது அவரின் மனநிலை

தமிழ் இளைஞர்களும் தமிழ் மாணவர்களும் அரசியல்மயப்படுத்தப்பட்டு தமக்காகப் போராடாமல் வெறுமனே அரசியல்வாதிகளுக்குப் பின்னால் கொத்தடிமைகளாக இருப்பதையே சாணக்கியன்  விரும்புகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் தேசியத்தின் தூய்மையான அரசியலில் தவிர்க்கப் பட்ட மதுப்பாவனையை அரசியல் செய்கிறேன் என்ற போர்வையில் மட்டக்களப்பின் அதிகளவான இளைஞர்களை போதைக்கு அடிமையாக்கி தமிழ் தேசியத்தில் எந்த ஒரு காலத்திலும் இல்லாத நடத்தைப் பிறழ்வான அரசியலை மூலதனமாக்கி தனி நபர் துதி பாடும் அரசியலை செய்கின்றமை மட்டக்களப்பு இளைஞர்களுக்கு பெரும் ஆபத்து என்பதை உணராமல் உள்ளது மிக வேதனையான நிலை என பலரும் கூறுகின்றனர்.

எனினும் கதிரையிலிருந்த போது காணாமல் இருந்த கிழக்கின் முன்னாள் தமிழரசுக்கள் பலவும் பேரணியில் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert