März 28, 2024

29.01.2008 அன்று சிங்கள பேரினவாத அரசு நிகழ்த்திய மன்னார் மடுப்படுகொலை

மன்னார் மாவட்டத்தில் மடுப் பிரதேச செயலர் பிரிவில் மடு என்னும் கிரமாம் அமைந்துள்ளது இங்கு இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாகவும் புனித யாத்திரையித் தளமாகவும் விளங்குகிற மடுத்தேவாலயம் அமைந்துள்ளது .இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் இனமத வேறுபாடின்றி மக்கள் வந்து தரிசிக்கின்ற ஒரு புனித தலமாகவே மடுத்திருப்பதி விளங்குகிறது .இப்பகுதியில் வசிப்பவர்கள் அனைவருமே கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவர்கள் என்பதுடன்இவர்கள் மடுத்திருப்பதிக்கு தொண்டு செய்வதிலே பெரிதும் அக்கறை கொண்டவர்களாக ,மிகவும் சிறப்புடன் வாழ்ந்து வருகின்றனர் .
இங்கு வசிக்கின்றவர்களில் அதிகமானோர் ,1990 ஆம் ஆண்டிலிருந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்ற இராணுவ நடவடிக்கைகளைத் தொடர்ந்து வவுனியா ,மன்னார் ,கிளிநொச்சி யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளிலிருந்து இடம் பெயர்ந்து பாதுகாப்பான இடம் எனக் கருதி மடுத்திருப்பதியில் தஞ்சம் புகுந்தவர்கள்.2007 நவம்பர் 13 ஆம் நாள் மடுத்தேவாலய வளாகம் மீது சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட எறிகணைவீச்சில் 05 வயதுச் சிறுவன் ஒருவன் கொல்லப்பட்டதுடன் வயோதிபப் பெண் ஒருவர் படுகாயமடைந்தார் .இதன் காரணமாக மக்கள் ,அச்சமடைந்து பெரியமடு கூராய் கள்ளியடி ,இலுப்பக்கடவை ,ஜெயபுரம் போன்ற இடங்களுக்கு சென்ற பின்னர் அங்கு 50குடும்பங்கள் அளவிலேயே வசித்துவந்தனர்

தற்போது மன்னார் மாவட்டத்தில் தவீரமாக்கப்பட்டுள்ள யுத்தம் காரணமாக திருப்பதி வளாகத்திலுள்ள சிறார்கள் .5 கிலோமிற்றர் தொலைவிலுள்ள தட்சணாமருதமடுவில் இயங்கிவந்த மன்சின்னப்பாண்டிவிரிச்சான் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையிலே கல்விகற்று வந்தனர் .இவர்கள் மடுவிலிருந்து புறப்படுகின்ற பயணிகள் பேருந்திலேயே சென்று வருவார்கள் .இங்கு பாடாசலை மாணவர்களுக்கு தனியாக பொதுமக்களுக்குத் தனியாக என பேரூந்து இல்லாமையால் அனைவரும் குறிப்பிட்ட நேரத்திற்கு வருகின்ற பேருந்திலேயே பயணிப்பார்கள்.
அவ்வாறே 2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29ம் நாளும் வழமை போல் பேரூந்தில் சென்ற சிறுவர்கள் பிற்பகல் பாடசாலை முடிந்ததும் இலுப்பைக் கடவையிலிருந்து மடு நோக்கிச் சென்று கொண்டிருந்த அதே பேரூந்தில் ஆனந்தமாக வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். பேரூந்து மடுவை அண்மித்ததும் சரியாக 2.30 மணியளவில் சிறிலங்கா ஆழ ஊடுருவும் அணியினரால் இப் பேரூந்தின் மீது கிளைமோர்த் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 09 பாடசாலைச் சிறார்கள், 01 ஆசிரியர், 01 பாடசாலைச் சிற்றூழியர், 01 மருத்துவ உதவியாளர், 01 பேரூந்தின் ஓட்டுனர், 01 பேருந்தின் நடத்துனர், 01 மடுத்தேவாலய உழவூர்தி ஓட்டுனர் என 15 பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். 13 மாணவர்கள் உள்ளடங்கலாக 21 பேர் படுகாயமடைந்தனர்.

இத் தாக்குதல் நடைபெற்ற சில நிமிடங்களில் தள்ளாடி முகாமிலுள்ள இராணுவத்தினர் அப் பகுதி நோக்கி எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டனர். இதனால் பெரும் சிரமங்களின் மத்தியிலேயே அப் பகுதி மக்கள் படுகாயமடைந்தவர்களை பள்ளமடு வைத்தியசாலையில் அனுமதித்தனர். பின் அங்கிருந்து உடனடியாக முழங்காவில் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். அங்கு மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தவர்களை கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். இவ்வாறு அனுப்பப்பட்டவர்களில் மூன்று மாணவர்கள் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர்.

பின்னர் கிளிநொச்சி வைத்தியசாலையிலிருந்து வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டவர்களில் ஜெனிஸ்ரன் பீரிஸ் என்ற சிறுவன் பெப்ரவரி 03ம் நாள் உயிரிழந்தார். மேலும் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்ட பாடசாலை அதிபர் பெப்ரவரி 05ம் நாள் மரணமானார். இதனைத் தொடர்ந்து இச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.
இச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் பெயர் விபரம்
01. அன்ரன் கொண்ஸ்ரன்ரயின் புறுனோ கொண்ஸ்ரன்ரயின் 13 மாணவன்02. அன்ரன் கொண்ஸ்ரன்ரயின் பிறிற்ரோ கொண்ஸ்ரன்ரயின் 15 மாணவன்03. செல்வசிங்கம் யூட்கொஸ்ரன் 15 மாணவன்04. செல்வசிங்கம் யூட்கொலிண்டன் 12 மாணவன்05. ரஞ்சன் ராஜசூரியர் தர்சிக்கா சாமினி 15 மாணவி06. சூசையப்பு சாம்சன் சொய்சா 13 மாணவன்07. சுhந்தன் பெனாட் றோஜ் 16 மாணவன்08. ஆந்தோனி பீரிஸ் ஜெனிஸ்ரன் பீரிஸ் 12 மாணவன்09. புpரான்சிஸ் சேவியர் ஆன்ஸ் பசிலியோ 11 மாணவன்10. பத்பராசா பேனாட் ஜெனார்த்தனன் 12 மாணவன்11. இமானுவேல் குணசிங்கம் அன்ரன் டெஸ்மன் 16 மாணவன்12. ஞானப் பிரகாசம் ஜோன் மில்டன் 16 மாணவன்13. அன்ரனி சதீசன் 11 மாணவன்14. செபமாலை மேரியோசப்பின் 31 ஆசிரியர்15. ரஞ்சன் ராஜசூரியர் பிரான்சிஸ்கா மங்களேஸ்வரி 37 பாடசாலை ஊழியர்16. கிருபைராசா ஜெராட் ஞானகரன் 29 பேரூந்து ஓட்டுனர்17. சூசையப்பு லெம்பேட் ஸ்ரான்லி சுரேஸ் லெம்பேட் 23 நடத்துனர்18. க.சண்முகசுந்தரம் 61 ஓட்டுனர்19. திருமதி. லேம்பேட் 51 அதிபர்20. விமலநாதன் றீத்தம்மா 33 தாதி

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert