April 19, 2024

தேர்தல் வேண்டாம்:பின்வாங்கினார் சிவி!

இலங்கையினுடைய பொருளாதாரம் மிகவும் மோசமாக உள்ள காரணத்தினால் உள்ளூராட்சி தேர்தலினை நிறுத்துவது சரி என்று நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி தேர்தல் இடம்பெறுமா? இல்லையா? என்ற சந்தேகம் நாடு முழுவதும் பரவியிருக்கின்ற நிலையில்  கருத்துத் தெரிவித்த சி.வி.விக்கினேஸ்வரன்  “தேர்தலை நிறுத்துவது சரி என்பது என்னுடைய கருத்து. இந்த தேர்தல் தேவையற்றது. நாட்டினுடைய பொருளாதார நிலைமை மிக மோசமாக இருக்கின்றது.

இந்த நிலைமையில் ஒரு தேர்தல் நடந்தால் மக்களிடையே ஒவ்வொருவருக்கிடையில் முரண்பாடுகளும், தமது பதவிகளிற்காக பிரிந்துகொண்டு போகின்ற தன்மையும் இந்த நாட்டிலே தற்பொழுது ஓரளவு நிலவும் சட்ட ஒழுங்கை கூட பாதித்துவிடும்.

அதை காட்டிலும் எத்தனையோ மில்லியன் தேர்தலிற்கு தேவையாக இருக்கிறது. நாட்டினுடைய பொருளாதாரம் சீர்கெட்ட நிலைமையில் பணத்தை தேர்தலில்; கொட்ட வேண்டிய அவசியமில்லை.

மாகாண சபை தேர்தலை நடத்தினால் பரவாயில்லை, ஏனெனில் மாகாணசபை என்று கூறும் போது வடகிழக்கு மாகாணங்களுக்கு கிட்டத்தட்ட நான்கு வருட காலங்களாக எந்த வித செயற்பாடுகளும் இல்லாமல் இருக்கின்றது.

இவ்வாறான ஒரு தேர்தல் இப்பொழுது நடைபெற வேண்டுமா? என்ற கேள்வி எழுகின்றது. சில வேளைகளில் அது நிறுத்தப்படக்கூடும். ஆனாலும் நாம் எமது கடமைகளை செய்ய வேண்டும். அந்த அடிப்படையில் எமது கடமைகளை செய்துகொண்டிருக்கின்றோம்” என சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert