April 20, 2024

தளபதி கேணல் கிட்டு நினைவு உட்பட ஜனவரி மாதம் நடைபெற்ற தமிழர் வரலாற்று தொகுப்புகள்!

சிங்களச்சிறீ  தமிழர்களின் வாகனங்களில் பொருத்தப்பட்டது: 

சிங்களப் பேரினவாதத்தின் ஆசியோடு ஆட்சிப்பீடமேறிய சிறீலங்காவின் பிரதமர் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்காவினால் சிங்களம் மட்டும் சட்டம் கொண்டுவரப்பட்டு தமிழீழப் பகுதிகளில் அமுல்ப்படுத்தப்பட்டது. அதன் ஒரு கட்டமாக 01.01.1958 அன்று தமிழர் பகுதிகளில் அனைத்து வாகனங்களிலும் சிங்கள சிறீ எழுத்தைப் பொறிக்க வேண்டும் என்ற அநாகரிக இனவாத விதி அமுல்படுத்தப்பட்டது.

தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை:

10.01.1974 அன்று சிறீலங்கா அரசின் பல்வேறு தடைகளையும் மீறி யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட உலகத் தமிழாராட்சி மாநாட்டு நிகழ்வின்போது சிறிமா அரசின் சிங்களக் காவல்படைகளால் 9அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

கிளாலி நீரேரிப் பயணிகள் படுகொலை:

2.10.1993 அன்று யாழ்மாவட்டத்தில் கிளாலி நீரேரியில் வைத்து குழந்தைகள் பெண்கள் உட்பட 50ற்கும் மேற்பட்ட பயணிகள் சிங்களக் கடற்படையினரால் படுகொலை செய்யப்பட்டனர்.

கப்டன் அருள் வீரச்சாவு:

தாயகத்து விடுதலைக்காக 1986இல் தன்னை விடுதலைப் புலிகளோடு இணைத்துக் கொண்டவர் கப்டன் அருள் மாஸ்ரர். தமிழீழ விடுதலைப் புலிகளால் பாவிக்கப்படும் துப்பாக்கி எறிகணையான அருள் -89 இவரால் வடிவமைக்கப்பட்டதாகும். 04.01.1988 அன்று நீர்வேலிப் பகுதியில் ஏற்பட்ட இந்திய இராணுவத்துடனான மோதலின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

வங்கக்கடலில் காவியம் படைத்த கேணல் கிட்டு உட்பட 10 போராளிகளின் நினைவு நாள்:

விடுதலைப் புலிகளின் மத்தியகுழு உறுப்பினரும் முதுபெரும் தளபதியுமான கேணல் கிட்டு அவர்கள் போராட்டவரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட ஒரு அத்தியாயம். யாழ் மக்களால் அன்புடன் நேசிக்கப்பட்ட இவர் சிங்களப்படைக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தவர்.

16.01.1993 அன்று வெளிநாட்டிலிருந்து குவேக்கர்ஸின் சமாதானச் செய்தியுடன் வந்து கொண்டிருந்தபோது இந்தியச் சதிக்குப் பலியாகி 9 போராளிகளுடன் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.

மாமனிதர் குமார் பொன்னம்பலம் – நினைவு நாள்:

சந்திரிகா அரசின் தமிழின அழிப்புக் கொள்கையை அம்பலப்படுத்தியவரும் மனிதஉரிமைவாதியும் சட்டத்தரணியுமான திரு.குமார் பொன்னம்பலம் அவர்கள் கொழும்பில் சந்திரிகா அரசின் கொலையாளிகளால் 05.01.2000 அன்று சட்டுக் கொல்லப்பட்டார்.

  சிங்களத்தின் தலைநகரில் தனித்து நின்று சிங்களப் பேரினவாதத்திற்கு சவால் விடுத்து ஆபத்துக்கள் சூழ்ந்திருந்தபோதும் அஞ்சா நெஞ்சத்துடன் அநீதியை எதிர்த்துப் போராடியவர் திரு.குமார் பென்னம்பலம் அவர்கள். இவரின் இனப்பற்றிற்கும் விடுதலைப் பற்றிற்கும் மதிப்பளித்து அவரது நற்பணியை கௌரவிக்கும் முகமாக தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களால் இவருக்கு மாமனிதர் விருது வழங்கப்பட்டது.

கேணல் சாள்ஸ் உட்பட ஏனைய மாவீரர்களின் 

மன்னார் மாவட்டத்தில் 05.01.2008 அன்று பள்ளமடுப் பகுதியில் சிறிலங்கா படைகளின் ஆழஊடுருவும் படைப்பிரிவு நடாத்திய கிளைமோர்த் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் படைய புலனாய்வுப்பிரிவுப் பொறுப்பாளர் கேணல் சாள்ஸ் (அருள்வேந்தன்)   லெப்டினன்ட் வீரமாறன், லெப்டினன்ட் காவலன், லெப்டினன்ட் சுகந்தன்  ஆகிய மாவீரர்கள்  வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்கள் 

மாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை

மாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் தனது 86 வது வயதில் பனாகொடவில் இருக்கும் இராணுவ முகாமில் 2010ம் ஆண்டு தை மாதம் 6ம் திகதி தனது இறுதி மூச்சை எம் மண்ணுக்காக விட்டுச்சென்றார்.

ஈழத்தமிழர்களின் ஒரே தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன் வேலுப்பிள்ளை அவர்களை எம் தேசத்தின் விடிவுக்காய் தந்த எங்கள் மாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் பிரிவு எம்மை மிக ஆழ்ந்த சோகத்தில் இட்டுசென்றது.

யுத்தம் முடிவுற்று பல மாதங்கள் ஆகியும் கடும் நோயின் காரணமாக தவித்த போது கூட அவருக்கு சிகிச்சை அளிக்க மறுத்த சிங்கள கொடூர அரசு அவரை அவ் முகாமை விட்டு செல்ல அனுமதிக்காமல் தனது கோர முகத்தை காட்டி நின்றது .

கடற்கரும்புலிகள் லெப். கேணல் நளா, மேஜர் வஞ்சியின்பன்

திருமலைக் கடற்பரப்பில் 07.01.2006 அன்று சிறீலங்கா கடற்படையின் டோறா கலம் மூழ்கடித்த கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி லெப்.கேணல் நளா, கடற்கரும்புலி மேஜர் வஞ்சியின்பன் ஆகியோர் 

கப்டன் பண்டிதர் (இளங்கோ)

யாழ். மாவட்டம் அச்சுவேலியில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் முகாமை 09.01.1985 அன்று சிறிலங்கா படையினரின் சுற்றிவளைத்து ஏற்பட்ட மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரும் – தளபதியுமான கப்டன் பண்டிதர் உட்பட ஆறு மாவீரர்கள் 

லெப். கேணல் பாண்டியன்

யாழ் மாவட்டம் காரைநகர் பகுதியில் 09.01.1988 அன்று இந்தியப் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டவேளை எதியியிடம் பிடிபடாமல் தன்னைத் தானே சுட்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்ட யாழ். மாவட்ட சிறப்புத் தளபதி லெப். கேணல் பாண்டியன் அவர்கள் 

தமிழீழ விடுதலைப்புலிகளின் முதற்பெண் தளபதி மேஜர் சோதியா

தமிழீழ ‘இதயம்பூமி’ மணலாற்றுக் கானகத்தில் 11.01.1990 அன்று சூகையீனம் காரணமாக வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் முதற்பெண் தளபதி மேஜர் சோதியா அவர்கள் 

தமிழீழ விடுதலைப் புலிகளால் அறிவிக்கப்பட்டிருந்தத போர் நிறுத்தம் 

நோர்வேயினால் முன்னெடுக்கப்பட்ட அமைதி நடவடிக்கைகளிற்காக நல்லெண்ண நடவடிக்கையாக ஒரு தலைப்பட்சமாக விடுதலைப் புலிகளால் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் விடுதலைப் புலிகளின் நல்லெண்ண நடவடிக்கையை புறம் தள்ளி 16.01.2001 அன்று சிறிலங்கா படையினரால் வட போர்முனையில் கிளாலி – எழுதுமட்டுவாள் ஊடாக பாரிய படை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இப்படை நடவடிக்கைக்கு எதிராக சனவரி 16 – 17 வரை விடுதலைப் புலிகளின் படையணிகள் தீரமுடன் போரிட்டு படைநடவடிக்கையைத் தடுத்து நிறுத்தினர்.

இத்தற்காப்புச் சமரில் லெப்.கேணல்கள் மதி(சுஜித்திரா) மற்றும் காவியா(ஜெசிமா) உட்பட 70 வரையான போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

ஈழத்தமிழர்களைக் காக்கவே உயிர்விடுகிறேன்……!

2009 சனவரி 29 ஆம் நாள் முத்துக்குமார் என்ற பத்திரிகையாளர், திரைத்துறை தொழில்நுட்பவியலாளர் சென்னை நுங்கம்பாக்கத்தில் நடுவண் அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள சாஸ்திரி பவனுக்கு முன்னால், ஈழத்தமிழர்களை வாழ்த்தி முழக்கமிட்டும், அவர்களைக் காப்பாற்ற கோரியும் மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீயை பற்ற வைத்து தமது உயிரை மாய்த்துக் கொண்டார். முன்னதாக தமது இறுதி அறிக்கையை அங்குக் கூடியிருந்தோரிடையே வழங்கினார். அது அவரது ஆழ்ந்த அரசியல் அறிவையும், கொள்கை உறுதியையும் பறைசாற்றியது. அவருக்கு வயது 26 சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகில் உள்ள கொழுவைநல்லூர். சென்னை அருகே கொளத்தூரில் அவரது சகோதரி தமிழரசியின் வீட்டில் தங்கிப் பணி செய்தார்

மூலம்  -தமிழீழ ஆவணக்காப்பகம் 

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert