April 24, 2024

ஈழத்து சிதம்பர திருவிழாவிற்காக ஏற்பாடுகள் பூர்த்தி!

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற காரைநகர் ஈழத்து சிதம்பர வருடாந்த திருவெம்பாவை உற்சவத்திற்குரிய சகல ஆயத்த பணிகளும் பூர்த்தியடைந்துள்ளதாக காரைநகர் பிரதேச சபையின் தவிசாளர் க, பாலச்சந்திரன் தெரிவித்தார்

இவ்வருட திருவெம்பாவை உற்சவத்தினை சிறப்பாக முன்னெடுத்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்றைய தினம் வியாழக்கிழமை காரைநகர்  பிரதேச செயலர் தலைமையில் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது

குறித்த கூட்டத்தில் இவ்வருட திருவெம்பாவை உற்சவத்தினை சிறப்பாக முன்னெடுப்பதற்குரிய ஏற்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்புகளோடு கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக போக்குவரத்து விடயம் தொடர்பில் இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் கலந்து கொண்டிருந்த நிரையில் போக்குவரத்து நேர ஒழுங்கமைப்புகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதோடு, நீர் மற்றும் திண்மக்கழிவகற்றல் விடயங்களை பிரதேச சபை பொறுப்பேற்பதாகவும் பாதுகாப்பு மற்றும் வீதி ஒழுங்குபடுத்தலை பொலிசார் மேற்கொள்வது எனவும் நேற்றைய கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது

தற்போது புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து ஈழத்து சிதம்பர திருவெம்பா உற்சவத்தை காண்பதற்கு வெளிநாட்டவர்கள் வருகை தந்த வண்ணமே உள்ளார்கள் எனவே இந்த வருட உற்சவம் மிகவும் சிறப்பாக இடம் பெறுவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்குங்கள் எனவும் தெரிவித்தார்.

இம்முறை திருவெம்பாவை உற்சவத்தை நடத்தாது தடுக்கும் நோக்குடன் , ஆலயத்தை பாலஸ்தானம் செய்ய சில தரப்புக்கள் முயன்ற வேளை திருவிழா உபாயக்காரர்களால் , ஊர்காவற்துறை நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ய ப்பட்ட நிலையில் ஆலயத்தை பாலஸ்தானம் செய்ய நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert