April 19, 2024

சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த வருகிறார் இந்திய தளபதி

இந்திய கடற்படை தலைமைத் தளபதி ஆா். ஹரிகுமாா் 4 நாள் விஜயமாக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இலங்கைக்கு வருகை தரவுள்ளார். 

இலங்கையில் தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்த சீனா தொடா்ந்து முயற்சித்து வரும்  நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு சீன உளவுக் கப்பல் வந்த நிலையில், அந்தக் கப்பலால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்று இலங்கையிடம் இந்திய மத்திய அரசு கவலை தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இந்திய கடற்படை தலைமைத் தளபதி ஆா்.ஹரிகுமாா் 4 நாள் பயணமாக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இலங்கைக்கு வருகை தரவுள்ளார். 

திருகோணமலை பகுதியில் உள்ள கடற்படை மற்றும் கடல்சாா் பயிற்சி பெற்றவா்களின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெறுகிறது.

அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ளும் ஹரி குமாா், நாட்டின் மூத்த அரசியல் மற்றும் பாதுகாப்புத் துறை தலைவா்களுடன் கலந்துரயாட உள்ளாா். 

நாட்டின் பல்வேறு பாதுகாப்பு தலங்களுக்கு செல்லும் அவா், இந்தியா – இலங்கை இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு செயல்பாடுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்ய உள்ளாா்.

அவரின் பயணம், இந்தியா – இலங்கை இடையே நீண்ட காலமாக நிலவி வரும் பாதுகாப்பு ஒத்துழைப்பை, குறிப்பாக கடல்சாா்ந்த ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்கும் என்று இந்திய கடற்படை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert