April 24, 2024

மட்டக்களப்பில் 5 கோரிக்கையை முன்வைத்து பெண்கள் போராட்டம் !

சர்வதேச மனித உரிமைகள் தினத்தையிட்டு ‚விசேட தேவையுடைய பெண்களுக்கான உரிமைக்காக எழுந்திடுவோம்‘ எனும்தொனிப் பொருளில் 5 கோரிக்கைகளை முன்வைத்து இன்று சனிக்கிழம (10) காந்திபூங்காவிற்கு முன்னால் பெண்கள் கவனயீர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்

கிழக்கு மாகாண சமூக அபிவிருத்தி அமையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த கவனயீர்பு போராட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு 2023ம் ஆண்டு முன்மொழியப்பட்ட தேசிய பாதீட்டில் விசேட தேவையுள்ள நபர்களுக்கு வழங்கப்படும் 5 ஆயிரம் ரூபாகொடுப்பனவை குறைப்தாக எடுத்த தீர்மானத்தை இரத்து செய்யுமாறும்.

நாட்டின் பொருளாதார நெருக்கடி மற்றும் கொரோனா தொற்று காரணமாக விசேட தேவையுள்ள பெண்கள் இழந்துள்ளனர் எனவே 2023 ம் பாதீட்டில் பொருளாதார அபிவிருத்தி திட்டம் ஒன்றை முன்மொழிந்து நடைமுறைப்படுத்த வேண்டும்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியில் விசேட தேவையுடைய பெண்கள் பிள்ளைகள் மற்றம் அவர்களில் தங்கிவாழும் முதியவர்கள் நாளாந்த உணவு தட்டுபாடு எதிர் கொள்வதுடன் போசாகு;கு சுகாதார பிரச்சனைக்கு முகம் கொடுத்துவருகின்றனர் எனவே விசேட தேவையுடைய பெண்களது குடும்பங்களுக்கான புதிய தொரு மேம்பாட்டு உணவு பாதுகாப்பை அமுல்படுத்தவேண்டும்.

அவ்வாறே மருந்து தட்டுப்பாடு இல்லாமல் சுகாதார சேவைகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். விசேட தேiவையுள்ள பெண்கள் இழப்பீட்டை பெற்றுக் கொள்வதற்கும் சமூகத்தில் கௌரவமான வாழ்கை முறையை முன்னெடுப்பதற்கான சந்தர்ப்பத்தையும் இழப்புpட்டிற்கான ஆiணைக்குழு முன்னெடுக்கவேண்டும் என்ற 5 கோரிக்கைகள் உள்ளடங்கலாக விசேட தேவையுள்ள பெண்களுக்கான மாதாந்த கொடுப்பனவை குறைக்காதே,

விசேட தேவையுள்ள பெண்களுக்கு சர்வதேச ரீதியான இழப்பீடு தேவை, கைசாத்திட்டபடி இலங்கையில் ஜ.சி.ஆர்.பி.டி யை அமுல்படுத்துங்கள், சமூக நலன் திட்டம் தேவை.

விசேட தேவையுள்ள பெண்களுக்கு உணவு பாதுகாப்பு திட்டம் தேவை, பொதுச்சேவை வழங்கிய விசேட தேவையுடைய பெண்களுக்கு பாரபட்சம் காட்டாதே, மாற்றுத்திறனாளிகளின் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவில் கைவைக்காதே, போன்ற வாசகங்கள் கொண்ட சுலோகங்கள் ஏந்தியவாறு காலை 9.30 மணிமுதல் 11 மணிவரை தமது கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பின்னர் விழிப்புணர்வு தெரு நாடகம் ஒன்றை நடாத்திய பின்னர் அங்கிருந்து விலகிச் சென்றனர்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert