April 24, 2024

சிங்களவருக்கு ஒரு கோடியாம்!

படுகொலை செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஒரு கோடி ரூபாவிற்கும் அதிகமான நிதியை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதேபோல், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கும் அரசாங்கம் இழப்பீடு வழங்க வேண்டுமென கோரிக்கைகள் தென்னிலங்கை சிவில் செயற்பாட்டாளர்களிடமிருந்து எழுந்துள்ளது.

இதனிடையே காணாமல் ஆக்கப்பட்ட ஒருவருக்கு 200,000 ரூபா நட்டஈடு வழங்குமாறு நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்சவினால் கடந்த ஒக்டோபர் 10ஆம் திகதி முன்வைக்கப்பட்ட யோசனையை நடைமுறைப்படுத்தும் வகையில் இந்த வருட வரவு செலவுத் திட்ட முன்மொழிவு இடம்பெற வேண்டுமென தென்னிலங்கை சிவில் செயற்பாட்டாளர்கள் கோரியுள்ளனர்.

எனினும் இலங்கை அரசின் காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கான அலுவலகத்தை நிராகரித்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது குடும்பங்கள் நட்ட ஈட்டையும் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert