März 29, 2024

பிரித்தானிய மாவீரர் நாள் 2022 ஆம் ஆண்டின் நிகழ்வுகள் ஆரம்பம்

பிரித்தானிய மாவீரர் நாள் 2022 ஆம் ஆண்டின் நிகழ்வுகள் ஆரம்பம்  லண்டன் எக்ஸல் தமிழர் ஒருங்கிணைப்பு குழு ஏற்பாட்டில் மாவீரர் நாள் நிகழ்வுகள் ஆரம்பமாகியது.

விடுதலைக்காய் களமாடி விதையான மாவீரர்களை வணங்கி உறுதி எடுக்கும் நாள்  தமிழீழ தேசிய மாவீரர் நாள். வழமை போன்று பிரித்தானியாவில் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினால் எக்ஸல் மண்டபத்தில் 2022 ஆம் ஆண்டிற்க்கான தமிழீழ தேசிய மாவீரர் நாள் உணர்வெழுச்சி பூர்வமாக பல்லாயிரக்கணக்கான மக்களோடு நினைவு கூறப்படுகின்றது.

நிகழ்வின் ஆரம்பமாக பொதுச்சுடரினை தமிழீழத்தேசிய செயற்பாட்டில் 1982 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருபவரும் பிரித்தானிய தமிழீழ ஒருங்கிணைப்பு குழுவின் செயற்பாட்டாளராகவும் இருக்கும் திரு.சின்னவன் சிவலிங்கம் அவர்கள் பொதுச் சுடரினை ஏற்றிவைத்தார். பிரித்தானிய தேசியக் கொடியினை பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செல்வி பாற்பரா ராஜன் அவர்கள் ஏற்றி வைத்தார். தமிழீழ தேசியக் கொடியினை  ராமச்சந்திரன் விஜயகுமார் எனும் இயற் பெயர் கொண்ட 1992 ஆம் ஆண்டு தாயக விடுதலை போரில் தன்னை இணைத்து மணலாறு மாவட்ட தளபதியாகவும், காவல் துறை ஆணையக பொறுப்பாளராகவும், திருகோணமலை மாவட்டத்துணைப்படை பொறுப்பாளராகவும் பல பொறுப்புகளை வகித்து இறுதி வரைகளத்தில் நின்ற திரு.தமிழவன் அவர்கள் ஏற்றி வைத்தார்கள்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert