April 19, 2024

இந்தோனேசியா நிலநடுக்கத்தில் 162 பேர் பலி: நூறுக்கு மேற்பட்டோர் காயம்!

இந்தோனேசியாவின் பிரதான தீவான ஜாவாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்தது 56 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேற்கு ஜாவா கவர்னர் ரிட்வான் கமில் உள்ளூர் ஊடகங்களுக்கு 56 பேர் இறந்ததாகவும் 700 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் உறுதிப்படுத்தினார்.

அமெரிக்க புவியியல் ஆய்வு தரவுகளின்படி, 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் மேற்கு ஜாவாவில் உள்ள சியாஞ்சூர் நகரில் 10 கிமீ ஆழத்தில் (ஆறு மைல்) தாக்கியது.

இடிந்து விழுந்த கட்டிடங்களுக்கு அடியில் இன்னும் சிக்கியிருப்பதாகக் கருதப்படும் மற்றவர்களை மீட்கும் முயற்சியில் மீட்புக் குழுவினர் இரவு முழுவதும் பணியாற்றினர்.

நிலநடுக்கம் தாக்கிய பகுதி மக்கள் அடர்த்தியாகவும், நிலச்சரிவுகளுக்கு ஆளாகக்கூடியதாகவும் உள்ளது. மோசமாக கட்டப்பட்ட வீடுகள் பல பகுதிகளில் இடிந்து விழுந்தன.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert