April 25, 2024

பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை வென்றது இங்கிலாந்து

ஆஸ்ரேலியா மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இருபதுக்கு இருபது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி உலகக் கோப்பையைக் கைப்பற்றியது.

இங்கிலாந்து இரண்டு உலகளாவிய ஒயிட்-பால் கோப்பைகளையும் கைப்பற்றிய முதல் அணி ஆனது.

முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்டுக்களை இழந்து 137 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணிசார்பில் அதிகபடியாக ஷான் மசூத் 38 ஓட்டங்களையும், அணித்தலைவர் பாபர் அசாம் 32 ஓட்டங்களையும், ஷதாப் கான் 20 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

துடுப்பாட்டத்தில் சோபிக்க தவறிய பாகிஸ்தான் அணியின் ஏனைய வீரர்கள் 20க்கும் குறைந்த ஓட்டங்களையே பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் இங்கிலாந்து அணியின் சாம் கர்ரன் 12 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களையும், ஆதில் ரஷீத் 22 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களையும், க்றிஸ் ஜோர்டன் 27 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

இந்த இன்னிங்ஸில் மொத்தமாக 08 உதிரி ஓட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், 138 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 19 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert