März 28, 2024

பிரித்தானியாவில் இடம்பெற்ற தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்!

10.10.1987 அன்று யாழ். மாவட்டம் கோப்பாய் பகுதியில் இந்தியப் இராணுவத்தினருடனான நேரடி மோதலில் விழுப்புண்ணடைந்த நிலையில் ‘சயனைட்’ உட்கொண்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதி அவர்களின் 35ம் ஆண்டு வீரவணக்க நாளும் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும் இன்றாகும்.

வணக்க நிகழ்வுகள் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரினால் லண்டனில் இன்று ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.

இன்றய நிகழ்வில் பொதுச்சுடரினை லெப் கேணல் கதிரவன் அவர்களின் தாயார் கமலாவதி கந்தசாமி அவர்கள் ஏற்றிவைத்தார் தொடர்ந்து தமிழீழ தேசிய கொடியினை கேணல் ராயு மற்றும் இறுதிப்போரில் வீரச்சாவடைந்த வீரவேங்கை கோமதி இவர்கள் இருவரினதும் சகோதரன் சக்திநாதன் அம்பலவாணன் அவர்கள் ஏற்றிவைத்தார்கள். ஈகைச்சுடரினை மன்னார் மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளராக பணியாற்றிய திரு சுரேஸ்  அவர்கள் ஏற்றிவைத்தார்கள்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert