September 10, 2024

வீரப்பன் தோளில் தொங்கிய துப்பாக்கி „தமிழ்நாடு விடுதலைக்காக.

வீரப்பன் தோளில் தொங்கிய துப்பாக்கி இன்னொரு தோளுக்காக காத்துக் கொண்டிருக்கிறது.!

வீரப்பன் யானைத் தந்தந்களை கடத்திய போது இந்திய அரசால் கொல்லப்படவில்லை.

வீரப்பன் சந்தன மரங்களை வெட்டியபோதும் இந்திய அரசால் கொல்லப்டவில்லை.

வீரப்பன் பொலிசாரைக் கொன்றபோதும்கூட இந்திய அரசால் கொல்லப்படவில்லை.

ஆனால் வீரப்பன் தமிழ்நாடு விடுதலையை முன்வைத்ததும் உடனடியாக இந்திய அரசால் சதி செய்து கொல்லப்பட்டார்.

தமிழ்நாடு விடுதலையை முன்வைக்கும் பலர் உயிரோடுதானே இருக்கிறார்கள். அப்படியிருக்க வீரப்பனை மட்டும் கொன்றார்கள் என்று எப்படி சொல்ல முடியும்?

உண்மைதான். நல்ல கேள்விதான். இதற்கு காரணம் வீரப்பன் தோளில் தொங்கிய துப்பாக்கியே.

வீரப்பனின் துப்பாக்கி யானைகளை சுட்டுக் கொன்ற போது இந்திய அரசு கவலை கொள்ளவில்லை.

வீரப்பனின் துப்பாக்கி பொலிசாரை சுட்டுக் கொன்றபோதும்கூட இந்திய அரசு பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.

ஆனால் வீரப்பன் துப்பாக்கி தமிழ்நாடு விடுதலைக்காக சுடப் போகிறது என்று அறிந்ததும் உடனடியாக இந்திய அரசால் கொல்லப்பட்டார்.

கொலைகாரன், கொள்ளைக்காரன், கடத்தல்காரன் என்று அழைக்கப்படும் வீரப்பன் முன் வைத்த கோரிக்கைகள் சில,

(1) 10ம் வகுப்புவரை தமிழ் வழிக் கல்வி வேண்டும்
(2) வாசாத்தியில் பாதிக்கப்ட்ட பெண்களுக்கு நட்ட ஈடு வழங்க வேண்டும்
(3) தடா சட்டத்தில் அடைக்கப்பட்ட அப்பாவிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்
(4) பெங்களுரில் மூடப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை திறக்க வேண்டும்
(5) காவிரி பிரச்சனை சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும்.

புரட்சிதலைவி என்று அழைக்கப்பட்ட ஜெயா அம்மையார் சிறையில் அடைக்கப்பட்டபோது முன் வைத்த கோரிக்கைகள் வருமாறு,

(1)தனக்கு சுகர், மூட்டுவலி இருப்தால் சலுகை தர வேண்டும்
(2)சிறையிலும் தன்கூட சசிகலா இருக்க அனுமதிக்க வேண்டும்
(3)வயது மூப்பு காரணமாக ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும்

தமிழ் மக்களே!
இப்போது புரிகிறதா ஏன் வீரப்பன் கொல்லப்பட்டார் என்று?

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert