April 25, 2024

நியூசிலாந்து நாட்டுத் தூதுவர் – மணிவண்ணன் சந்திப்பு!

யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணன் மற்றும் நியூசிலாந்து நாட்டுத் தூதுவர் மிச்சல் அபேல்டன் ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று ,யாழ் மாநகர சபையில் இன்று இடம்பெற்றது.

இதன் போது மாநகர முதல்வர், நாட்டில் உள்ளூராட்சி  தேர்தல்கள்  நடைபெறாமல் உள்ளது.,குறிப்பாக நீண்ட காலமாக மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெறாமல் உள்ளது. 2018 ஆம் ஆண்டு உள்ளூராட்சி தேர்தல்கள் நடைபெற்ற பின்னர் ,நான்கு வருடங்களுக்கு பின்னர் இம்முறை தேர்தல் நடைபெறவேண்டும்.ஆனால் தற்போது வரை அதற்கான எந்த நடவடிக்கையும் அரசு முன்னெடுக்கவில்லை.பாராளுமன்றம் கலைக்கப்பட்டு ,புதிய அரசு ஒன்று அமைய வேண்டும் என்றே மக்கள் விரும்புகின்றனர்.ஆகவே இவ்வாறான தேர்தல்கள் நடைபெறுவதற்கு நியூசிலாந்து அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றார்.

இலங்கை அரசுக்கு எதிராக கொழும்பில் இடம்பெற்ற போராட்டங்களில் தமிழ் மக்கள் ஏன் கலந்துகொள்ளவில்லை என தூதுவர் வினவினார்.

இது தவிர சர்வதேச அழுத்தம் மூலம் தமிழ் மக்களுக்கு தேவையான விடயங்களை பெற்றுக்கொடுக்க வேண்டும்.பொருளாதார பிரச்சினைக்கு புலம் பெயர் உறவுகள் உதவி செய்வதற்கு தயாராக உள்ளனர்.அதற்கு தமிழ் மக்களுக்கு சமஸ்டி அடிப்படையிலான தீர்வை அழுத்தங்கள் மூலம்  பெற்றுத் தர வேண்டும்.அரசால் நிர்மூலமாக்கப்பட்ட கட்டடம் இப்போது பொருளாதார பிரச்சினையால் இடை நடுவே நிற்கிறது.அதனை சீர் செய்வதற்கு உதவி செய்ய வேண்டும்.

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட தூதுவர் யாழ் பொது நூலகம்  உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு விஜயம் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert