April 20, 2024

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் பியரிற்கு அலைகின்றனர்: முன்னணி!

பல்கலைக் கழக மாணவர்களிடம் தேசியம் இல்லை. அவர்கள் பியருக்கும் காசுக்கும் அலையும் கூட்டம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் ஆசிரியர் சங்க துணைத்தலைவருமான  நபர் வெளியிட்ட கருத்து சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.

தனது சமூக வலைத்தளத்தில் இது தொடர்பில் பதிவிட்டுள்ள அவர், தேர்தல் நேரம் தமிழ் தேசிய அரசியல் தொடர்பாக கலந்துரையாட மாணவர் ஒன்றிய பிரதி நிதிகள் நால்வரை ஒரு கட்சி தலைவர் சந்தித்தார். நானும் அருகே இருந்தேன்

தமிழ் தேசிய அரசியல் நிலைப்பாடு தொடர்பாக பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் சரியான விடயங்களை ஆராய்ந்து முன்னிலைப் படுத்தவேண்டும் என்று சாரப்பட அந்த கலந்துரையாடல் அமைந்திருந்தது.

அப்போது அங்கிருந்த மாணவர் பிரதி நிதிகளில் ஒருவர், இந்த விடயங்களை கதைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். சும்மா அழைத்தால் மாணவர்கள் வர மாட்டார்கள். ஒரு உபசரிப்பு நிகழ்வு போன்றே அழைக்க வேண்டும் என்றார்கள். அதுக்கு கொஞ்சம் காசு தேவை என்றார்கள்.

எவ்வளவு என்று கேட்ட போது…கொஞ்சம் கூட முடியும், சும்மா சாப்பாடு குடுக்க முடியாது பியரும் குடுக்க வேண்டும் என்றார்கள்.

அப்போதே புரிந்து விட்டது மாணவர்களின் பியறுக்கான தேசியம் எப்பிடி இருக்குமென்று. அதன் பின் பிறகு இன்னொரு நா ள் சந்திப்போம் என்று கூறி அந்த கலந்துரையாடல் முடிக்கப்பட்டது.

அதேவேளை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மாணவர்கள் செய்த போது அவர்கள் தங்கிய இடத்தில் ஏராளமான பியர் போத்தல்களும் டின்களும் இருந்த விடயங்களையும் நினைவு படுத்த விரும்புகிறேன் – என்று குறிப்பிட்டுள்ளார்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert